ஐக்கியம் கொள்வதற்கான வழி THE WAY TO HAVE FELLOWSHIP 55-1009 ஞாயிற்றுக்கிழமை மாலை, அக்டோபர் 9, 1955 லேன் டெக் உயர்நிலைப் பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ஐக்கியம் கொள்வதற்கான வழி (55-1009) ...?...விசுவாசியுங்கள் எல்லாம் கூடும், விசுவாசித்தால் மட்டும் போதும்; விசுவாசித்தால் மட்டும் போதும், விசுவாசித்தால் மட்டும் போதும், எல்லாம் கூடும், விசுவாசித்தால் மட்டும் போதும். ஜெபத்திற்காக ஒரு நிமிடம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா. எங்கள் பரம பிதாவே, உம்முடைய மீட்கும் அன்புக்காகவும் கிருபைக்காகவும் உமக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக, தகுதியற்ற எங்களை ஒருவரோடொருவர் மற்றும் உம்மோடு இந்த அற்புதமான ஐக்கியத்திற்குள் மீட்டுக் கொள்வதற்காக நீர் பரலோகத்தின் வாசல்களை விட்டு பூமிக்கு வந்தீர்-அதேவேளையில் உம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தம் எல்லா அநீதியிலிருந்தும் எங்களைச் சுத்திகரிக்கிறது. நீர் எங்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு இந்த ஆராதனையில் நீர் எங்களுக்கு ஒரு பெரிய உச்சக்கட்டத்தை தர வேண்டும் என்று இப்போது நாங்கள் ஜெபிக்கிறோம். நம்முடைய கட்டிடத்தை விட்டு ஒரு பலவீனமான நபர்கூட வெளியேறாமல், முழுமையாகச் சுகமாக்கப்படுவதை நான் மீண்டும் ஒருமுறை காணக்கூடிய இரவாக இது அமையட்டும். ஒவ்வொரு பாவியையும் இரட்சியும், தேவனே, இதை அருளுவீராக. இயேசுவின் நாமத்தில், எங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம். 2 உங்களைப்போன்ற மக்களே இந்த உலகத்தை வாழ்வதற்கு ஒரு அற்புதமான இடமாக மாற்றுகிறார்கள், மேலும் ஒருநாள் நாம் இதை விட்டுச் சிறிதுகாலம் பிரிய வேண்டும் என்று நினைக்கும்போது அது மிகவும் கடினமாக இருக்கிறது. அதற்குப் பிறகு இருக்கும் மகிமையான எண்ணம் என்ன வென்றால், நாம் மீண்டும் என்றென்றைக்கும் ஒன்றாக இருப்போம், அங்கே இனி பிரிவினை இருக்காது என்பதை அறிவதே. சிகாகோவில் நான் கலந்துகொண்ட ஒவ்வொரு கூட்டத்தைப் போலவே, இதுவும் தேவனுடைய மக்களைச் சந்திப்பதற்கும், ஐக்கியம் கொள்வதற்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு வியாதியஸ்தர்களைச் சுகமாக்குவதைக் காண்பதற்கும் எனக்கு ஒரு சிலிர்ப்பான நேரமாக இருந்தது, உண்மையில் இது ஒரு அற்புதமான நேரமாக இருந்தது. போதகர்களுக்கும், குறிப்பாக இங்குள்ள, ஒரு நெருங்கிய நண்பராக இருக்கும் சகோதரர் ஜோசப் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். சகோதரர் ஜோசப்பை என் முழு இருதயத்தோடும் நேசிக்க நான் கற்றுக் கொண்டேன். அது அவருக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், அவர் என்னை நேசிக்கிறார், அதனால்தான் அவர் என்னை சிகாகோவிற்கு வரும்படி கேட்டிருக்கிறார். அந்த அற்புதமான அழைப்பிற்காக அவருக்கும், உங்கள் அனைவருக்கும் என் முழு இருதயத்தோடும் நான் நன்றி கூறுகிறேன். 3 நான் உடனடியாக இடம் மாறத் திட்டமிட்டுள்ளேன் என்பது உண்மைதான். அதற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், அது ஒரு ஆணா அல்லது பெண்ணா என்று நான் நினைக்கிறேன். இன்று அது ஒரு பெண்மணி என்று நான் நம்புகிறேன், அவர்களுக்கு அதைப் பற்றி முன் எண்ணம் இருந்ததா அல்லது என்னவென்று எனக்குத் தெரியாது, அவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார், அவருக்கு கொலராடோவில் ஒரு இடம் இருக்கிறது; அவர் அதை என் பெயரில் எழுதிக் கொடுக்க விரும்பினார். இன்றிரவு நீங்கள் இங்கே இருந்தால், அது உங்களுடைய மிகுந்த அன்பைக் காட்டுகிறது, என் சகோதரியே. பில்லி சுற்றி வந்து, குக்கீஸ்கள் அடங்கிய பெட்டிகள் உட்பட உங்கள் ஒவ்வொரு வரிடமிருந்தும் வந்த சிறிய பரிசுகளை என்னிடம் கொடுத்திருக்கிறான். நாங்கள் அதைப் பாராட்டுகிறோம். ஜோசப் அதற்குச் சற்று சிறியவன், ஆனால் சாராளும் ரெபெக்காளும் அதை ஈடுசெய்கிறார்கள்; எனவே ஒவ்வொரு சிறிய விஷயமும், சிறிய அடையாளமும் நிச்சயமாகப் பாராட்டப்படும். சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதர் என் பையனுக்கு ஒரு துப்பாக்கியைக் கொடுத்தார். இப்போது, பெரும்பாலும் நான்... வேட்டை யாடுவதை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் வேட்டையாடுவதை நேசிப்பது மட்டுமின்றி, காடுகளில் இருக்கவே விரும்புகிறேன்; நான்-நான் அதை மிகவும் நேசிக்கிறேன். மக்கள் எனக்குக் கொடுத்த துப்பாக்கி மற்றும் பொருட்களுக்கு ஈடாக, நான் எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்; அவற்றை எதுவும் விலைகொடுத்து வாங்க முடியாது. 4 இப்போது, நானே ஒன்றை விலைக்கு வாங்கி, யாராவது வந்து, "சகோதரர் பிரன்ஹாம், எனக்கு அது பிடித்திருக்கிறது, அது எனக்கிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று சொன்னால். நான், "சரி அதை எடுத்துக்கொள்ளுங்கள்," என்று சொல்வேன். ஆனால் யாராவது அதை எனக்குக் கொடுத்தால், அதை எதுவும் எடுக்க முடியாது. நான் திரும்பி நிற்கும்போதுதான் நீங்கள் அதை எடுக்க வேண்டும், அதுதான் அதைப் பெறுவதற்கான ஒரே வழி. ஏனென்றால் அது எதுவாக இருந்தாலும் நான் அதைப் பாராட்டுகிறேன். சிறிய விஷயங்கள் எதற்கும் அர்த்தமில்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஒருவேளை சிலர் அவற்றை வெளியே எறிந்துவிடுவார்கள் என்று நினைக்கலாம், சிறிய பழைய அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த சிறிய கிளிஞ்சல்கள், அல்லது அதுபோன்ற ஏதாவது இருக்கலாம். அவை ஒவ்வொன்றையும் நான் பாதுகாத்து வைக்கிறேன். அவை யாரிடமிருந்தோ வந்திருப்பதால், நான் அவற்றையும் நினைவில் கொள்கிறேன். அது ஜிப்ஸி ஸ்மித் என்று நான் நம்புகிறேன், அவர் ஒருமுறை, இரட்சிப்புக்கு வெளியே, தான் பெற்றதிலேயே மிகப் பெரிய காணிக்கை என்று சொன்னார்... "ஒரு நாள் இரவு அதிலிருந்து அவருக்காக ஒரு அன்புகாணிக்கை எடுக்கப்படவிருந்தது," என்றார். மூலமாக, அதனால்தான் அவர் இரட்சணிய சேனையிலிருந்து வெளியேற்றப் பட்டார் என்று நான் நினைக்கிறேன், ஒரு-ஒரு காணிக்கை எடுத்தது, அல்லது அதுபோல... இல்லை, அது யாரோ அவருக்குக் கொடுத்தது, ஒரு கடிகாரம் அல்லது அதுபோல ஏதோவொன்று. இரட்சணிய சேனையில் நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது என்று நான் நம்புகிறேன். 5 ஆனால் அவர், "எல்லா மக்களும்-அவருக்கு ஒரு அன்புகாணிக்கையைக் கொடுத்தார்கள். தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து அவர்கள் அதைச் செய்தார்கள்," என்று சொன்னார். அந்த மக்களில் பலர் இன்றிரவு மகிமையில் இருக்கிறார்கள், அந்த அற்புதமான தேவ மனிதனுக்கு உதவியதற்காக அவர்களுக்கான பலன் அவர்களுடனே இருக்கிறது. அவர் ஒரு வியக்கத்தக்க காரியத்தைச் சொன்னார். அன்றிரவு அவர் கூட்டத்தை விட்டுப் புறப்படத் தொடங்கிய போது, திரைக்குப் பின்னால் ஒரு சிறுமி கந்தலான உடைகளுடன் நின்றுகொண்டிருந்தாள், அவள் கையில் மடிக்கப்பட்ட ஒரு சிறிய பரிசு இருந்தது. அவள், "மிஸ்டர் ஸ்மித்திடம் கொடுங்கள்," என்று சொல்லி, "என்னிடம் இருப்பது இது மட்டும்தான், ஆனால் இது உங்களுக்கான என் அன்புகாணிக்கை," என்றாள். அவர் வெளியே வந்து அதைப் பிரித்தபோது, அது கொஞ்சம் சுவைக்கப்பட்ட ஒரு லாலிபாப். ஆனால் அவள்... தன்னிடம் கொடுக்கக் கூடியதெல்லாம் இதுதான் என்று அவள் நினைத்தாள். 6 அது அவரை-எப்படிப் பாதித்தது என்று அவர் அடிக்கடி சொல்வார். அது சரிதான், அவளிடம் இருந்தது அவ்வளவுதான். உங்களுக்குத் தெரியும், அந்த நேரத்தில் விதவை இரண்டு காசுகளைக் காணிக்கையாகப் போட்டதைப் பார்த்தவர், அந்த லாலிபாப்பையும் பார்த்தார், நீங்கள் அப்படி நம்பவில்லையா? நிச்சயமாக அவர் பார்த்தார்; அவர் எல்லாவற்றையும் காண்கிறார். அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், இயேசு, "இரண்டு அடைக்கலான்-இரண்டு அடைக்கலான் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுகிறதில்லையா," என்று சொன்னார். மேலும் ஒரு ஃபார்திங் என்பது ஒரு பென்னியின் நான்கில் ஒரு பங்கு. இரண்டு குருவிகள், ஒரு ஃபார்திங், ஒரு பென்னியின் நான்கில் ஒரு பங்கு இரண்டு குருவிகளை வாங்கும், அது எவ்வளவு அற்பமானது. மேலும் அவர், "அவைகளில் ஒன்றுமில்லை... அவைகளில் எதுவும்... உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் ஒரு குருவியானாலும் தரையிலே விழாது," என்றார். அவருக்கு எல்லாம் தெரியும், அல்லவா? ஆகவே நம்முடைய இருதயங்களை அப்படியே அவருக்கு முன்பாகத் திறந்து வைப்பது அற்புதமானது அல்லவா? உங்கள் ஒத்துழைப்புக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும், போதகர்களாகிய உங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் போதகர் இங்கே இல்லாவிட்டாலும், அவர் இந்தக் கூட்டத்தைப் பற்றியோ அல்லது எதைப்பற்றியோ பேசியிருந்தால், அவருக்கு என் அன்பையும், வாழ்த்துகளையும், உண்மையோடு தெரிவி யுங்கள். உங்களில் ஒவ்வொருவருடைய சபையும் ஒரு பெரிய ஆவிக்குரிய கலங்கரை விளக்காக மாற வேண்டும் என்றும், உங்கள் சபையில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாக வேண்டும் என்றும் அவருக்காக நான் ஜெபிக்கிறேன். நீங்கள் எந்தச் சபையைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்குக் கவலையில்லை; அது எனக்கு ஒரு பொருட்டல்ல, அது தேவனுக்கும் ஒரு பொருட்டல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். வெறுமனே... அவர் தேடி வருவது உங்களைத்தான், உங்களைத்தான். 7 சற்று முன்பு சகோதரர் ஜோசப், நான் இங்கே இருந்த இந்த இரவுகளுக்காக எனக்காக ஒரு அன்புகாணிக்கை எடுப்பார்கள் என்று குறிப்பிட்டபோது... நான் அதைப் பாராட்டுகிறேன், ஒருவேளை, சகோதரர்கள் இப்போது அதை எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆராதனைக்குப் பிறகு, நான் புறப்படுவதற்கு முன்பு, ஒருவேளை அதற்கான காசோலையை அவர்கள் என்னிடம் கொடுக்கலாம். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அதை நான் எடுக்க வேண்டாம் என்று விரும்பினேன், ஆனால் நான் வெளிநாடுகளுக்குச் செல்கிறேன், இப்போது நிறைய வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், என்னிடம் எந்த மூலதனமும் இல்லை. நான் அமெரிக்காவில் எப்போதாவது ஒருமுறை ஒரு கூட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. நான் எங்கே இருந்தாலும், அலுவலகம் மற்றும் எல்லாவற்றிற்குமாக என் செலவுகள் ஒரு நாளைக்கு சுமார் நூறு டாலர்கள் ஆகிறது. இதனால் நான் மிகவும், மிகவும், மிகவும் கடனாளியாகி விடுகிறேன். பிறகு நான் சில கூட்டங்களை நடத்துவேன், அவர்கள் எனக்கு அன்புகாணிக்கைகளைக் கொடுப்பார்கள்; அதனால் நான் சற்றே மீண்டு வருவேன். பிறகு யாராவது வந்து வெளிநாடுகளில் எனக்கு ஆதரவளிக்க விரும்புவார்கள், நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் செல்வேன். 8 கடந்த இரண்டு முறையும் கிறிஸ்தவ வியாபாரிகள் மற்றும் அவர்கள், நான் ஒரு காசு கூட செலவழிக்கத் தேவையில்லாத இடங்களுக்கு என்னை அனுப்பினார்கள். அவர்கள் எனக்குப் பணம் கொடுக்க முடியாது, ஏனென்றால் அது எனக்கு ஒரு பரிசாகிவிடும், ஆனால் அவர்கள் என் பயணச் செலவை ஏற்க முடியும். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒருவர், கர்த்தர் என்னை வழிநடத்தும்போது, பாலஸ்தீனாவிற்கு என்னை மீண்டும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறினார். அது மிகவும் அருமையானது, அதற்காக நான் நன்றி கூறுகிறேன்; எல்லாவற்றிற்காகவும் நான் நன்றியுள்ள வனாயிருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் ஒன்றாகக் கூடிவரச் சாத்தியமாக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேன். சகோதரர் ஜோசப் என் வீட்டைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரன்ஹாமுக்கு நற்பெயர் கொடுக்கப்பட வேண்டுமானால், அதை என் மனைவிக்கே கொடுங்கள். அது சரிதான். அவளே அதற்குத் தகுதியானவள். முப்பத்தாறு வயது, தலைமுழுவதும் நரைத்திருக்கிறது. படுத்து ஓய்வெடுப்பது என்றால் என்னவென்றே அந்தப் பெண்ணுக்குத் தெரியாது. எங்கள் தேசத்தில் நாங்கள் கடினமான நேரத்தை எதிர்கொள்கிறோம்; அது என்னுடைய சொந்த ஊர். என்னை மன்னியுங்கள். [சகோதரர் பிரன்ஹாம் இருமுகிறார்] அங்கேதான் நான் பிறந்தேன் அல்லது வளர்ந்தேன். அவள் இங்கு வந்து இந்த கடந்த இரண்டு இரவுகளை எங்களோடு கழிக்கையில், ஜோசப்பைப் பார்த்துக்கொள்ள யாராவது வருவார்களா என்று, தான் கொடுக்கக்கூடிய எந்தவொரு தொகையையும் கொடுத்து இந்த வாரம் முழுவதும் முயற்சித்தாள். பெண்கள் வந்து வேறு எதையும் செய்யாமல் குழந்தைகளை மட்டும் கவனித்துக்கொண்டால், அவர்களுக்கு வாரத்திற்கு முப்பத்தைந்து மற்றும் நாற்பது டாலர்கள் வரை செலவுத் தொகையாகக் கொடுக்க நான் முன்வந்தேன்; யாரையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு அல்ல; இது இரண்டு அல்லது மூன்று வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. 9 ஆகவே, பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபர்சன்வில்லையிலிருந்து விலகிப்போகச் செய்வதுபோல் தோன்றுகிறது. அவர் என்னை எங்கே செல்ல விரும்புகிறார் என்று ஒரு இடத்திற்காக நான் இப்போது காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் என்னை இந்த வழியில் வழிநடத்தினால், அல்லது நான் எங்கே சென்றாலும், சிகாகோ எனக்குச் சம்மதமே. எனவே நான் ஜெபத்தில் இருக்கிறேன், நான் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று நீங்களும் எனக்காக ஜெபியுங்கள். ஆனால் என்னால் இனிமேல் அங்கு தங்கியிருக்க முடியாது, இது மற்ற காரியங்களைப் போலவும் தெரிகிறது. எனக்குத் தெரிந்தவரை, யாரும் எனக்கு விரோதமாக இல்லை. அப்படி இருந்தால், காலையிலேயே அவர்கள் வீட்டு வாசலில் நின்று அதைப் பற்றி நான் விசாரிப்பேன். ஆனால் அது பரிசுத்த ஆவியானவர்தான். யாக்கோபை நினைத்துப் பாருங்கள், காரியங்கள் தவறாகப் போகத் தொடங்கின (பார்க்கிறீர்களா?), அவனுக்கு ஒரு ஏக்கம் இருந்தது, மேலும்-மேலும் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது, எனவே அவன் அங்கிருந்து செல்ல வேண்டியிருந்தது, எனவே-சொந்த தேசத்திற்குத் திரும்பிச் சென்றான். ஆகவே பரிசுத்த ஆவியானவர் எங்கு நடத்தினாலும், எனக்குச் சம்மதமே. 10 இப்போது, அடுத்த வருடம் பெரிய போராட்டம் வருவதற்கு முன்பு இது என்னுடைய விடுமுறை காலம். கிறிஸ்தவ வியாபாரிகள், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும், எனக்காக ஒரு சிறிய பயணத்திற்கு நிதியுதவி செய்யும் நேரம் இது, நான் சொந்தமாகச் செலவு செய்து செல்ல முடியாத ஒரு பயணம். அது சால்மன் நதியில், திரும்பி வர முடியாத நதியில் நடைபெறும் ஒரு பயணம். நீங்கள் ஒரு மரப்படகில் பத்து நாட்கள் மிதந்து செல்ல வேண்டும், நீர்வீழ்ச்சிகளில் முப்பது அடி பள்ளம் வரை கீழிறங்க வேண்டும், இது மிகவும் கடுமையான பயணம், ஆனால் நீங்கள் தேவனுடைய தேசத்திற்குத் திரும்பி விடுகிறீர்கள். நான் அதை நேசிக்கிறேன். மேலும் நான்... இப்போது, நான் புறப்படுகிறேன்... ஒரு மாதப் பயணத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு இந்த முறை நான் வீட்டில் நான்கு மணிநேரம் மட்டுமே இருக்கிறேன். நல்ல கர்த்தருக்குச் சித்தமானால், இந்தத் திரும்பி வர முடியாத நதியில் நான் கீழே செல்கிறேன், அங்கே கீழே ஒரு நாள் காலையில், சிலசமயம் விடிவதற்கு முன்பே என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தனியாக மலைக்குள் வெகுதூரம் சென்று, என் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, நான் சுற்றிலும் பார்க்கக்கூடிய வகையில் மலையின் உச்சியில் அமர்ந்துகொள்வேன்; அங்கே அன்றைய நாள் முழுவதும் நான் தேவனோடு பேசுவேன். சிலசமயம் இரண்டு நாட்கள் தங்குவேன், ஒருவேளை அதைவிட அதிகமாகவும் தங்குவேன், அந்த மரத்தடியிலோ, அல்லது நான் எங்கிருக்கிறேனோ அந்த இடத்திலோ, அல்லது ஒரு பாறையிலோ தங்குவேன். அது வேட்டையாடுவது என்பதல்ல; அது தேவனோடு தனித்திருப்பது. நான் உங்களுக்காக ஜெபிப்பேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவருடைய... சந்திரனைப் பிரகாசமாக வைத்திருக்கவும், இருளாக இருக்கும்போது நடப்பதற்கு நமக்கு வழிகாட்ட நட்சத்திரங்களை ஒளிரச் செய்யவும் கூடிய அவர், நாம் மீண்டும் சந்திக்கும் வரை இப்போது உங்களோடு இருப்பாராக. தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 11 இப்போது நான் இங்கே வேதாகமத்தைத் திருப்பி ஒரு-ஒரு சிறிய வேதப்பகுதியை வாசிக்க விரும்புகிறேன். நான் எதையாவது விட்டுவிட்டிருந்தால்... ஓ, ஒன்று, இங்குள்ள இந்த நல்ல மனிதர், காப்பாளர், அவர் ஒரு மிக நல்ல மனிதர். அவருக்கு என்னைத் தெரியும், என்னிடம் மிகவும் நல்லவிதமாக நடந்து கொண்டார், அவரை என் முழு இருதயத்தோடு நான் பாராட்டுகிறேன். அவர் என்னை மிகவும் அன்போடு வரவேற்கிறார். நாங்கள் இங்கே வருவதற்கு அனுமதித்த லேன் டெக் உயர்நிலைப் பள்ளி நிர்வாகக் குழு. தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அமெரிக்க மண்ணில் உள்ள எந்தப் பள்ளியும் உருவாக்கக்கூடிய மிகச் சிறந்தவர்களை இந்தப் பள்ளி உருவாக்க வேண்டும் என்பதே என் ஜெபம். தேவன் அவர்களோடு இருப்பாராக; இந்தக் காரியங்களுக்காக அவர்கள் தங்கள் கதவுகளைத் திறந்தார்கள். உங்களுக்கு எப்போதாவது ஒரு நிகழ்ச்சி இருந்தால், நான் வந்து உங்களுக்கு உதவ முடியும். அதிகாரிகள் யாராவது கேட்டுக்கொண்டிருந்தால், நான் நிச்சயமாக அதைச் செய்வேன். உங்களுக்கு உதவ என்னால் முடிந்த எதையும் நான் செய்வேன், ஏனென்றால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும்; சுவிசேஷத்திற்காக நீங்கள் கதவுகளைத் திறந்துள்ளீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி. 12 மேலும், இன்றிரவு இங்கே கீழே அமர்ந்திருக்கும் சில கண்ணுக்குத் தெரியாத நண்பர்களின் கூட்டம் எனக்கு இருக்கிறது. அவர்கள் அனைவருடைய பெயர்களையும் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; என்னால் முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஜெபத்தின் மூலமும் மற்றவற்றின் மூலமும் எனக்கு ஆதரவளிக்கிறார்கள், இந்த இசைக்கலைஞர்கள் அமரும் குழியில் கீழே அமர்ந்திருக்கிறார்கள். எனக்குத் தெரியாது, அங்கே கீழே ஒரு இசைக்கலைஞரும் இருக்கலாம். அந்த மனிதர்கள் இசைக் கலைஞர்கள் என்று நான் நம்பவில்லை; அவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்... நீங்கள் உங்கள் போதகரை இதன் மேலிருந்து பார்த்தால் உங்களுக்குத் தெரியும்... அவர்கள் ஒலிப்பதிவு செய்யும் கலைஞர்கள், அவர்கள் கீழே சென்று இந்தச் செய்திகளை ஒலிப்பதிவு செய்கிறார்கள். ஆகவே, எனக்குச் சகோதரர் பீலரைத் தெரியும், அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபரையும் எனக்குத் தெரியும். அவருடைய பெயரை என்னால் சொல்ல முடியவில்லை; அவர் யூதர்களுக்கோ அல்லது அரேபியர்களுக்கோ மிஷனரியாக இருக்கிறார், அல்லது ஏதோவொன்று. 13 மேலும், நிச்சயமாக, சுவிசேஷத்தில் என் உடன் வேலையாட்களாகிய லியோவும் ஜீனும் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். சகோதரர் அல்மென்ட், மற்றும் இங்குள்ள மற்றொரு சகோதரர், இவர் ஒவ்வொரு நாளும் என் ஆராதனை கூடத்திற்கு வண்டியோட்டி வருகிறார். நான் அங்கே இருக்கப் போகிறேன் என்று அவருக்குத் தெரியும், நான்... உங்கள் பெயர் என்ன சகோதரரே? ஸ்மித், அப்படித்தானே? ஸ்மித். ஒரு சிறிய பழைய காரில் ஹம்மண்ட் அல்லது கேரி அல்லது ஏதோவொரு இடத்திலிருந்து இவ்வளவு தூரம் இங்கே வருகிறார், நான்... சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் உள்ளே பார்த்தார்கள், அது புத்தம் புதிய கார், ஆனால் அதில் அவர் சுமார் எண்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கள் ஓட்டியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை இங்கிருந்து ஜெபர்சன் வில்லிற்கு, முன்னும் பின்னுமாக ஓட்டியதேயாகும். இந்தச் சகோதரரின் முகம் எனக்குத் தெரியும், ஆனால் அவருடைய பெயரை என்னால் சொல்ல முடியவில்லை. உங்களில் பலருடைய முகம் எனக்குத் தெரியும், ஆனால் உங்கள் பெயரை என்னால் சொல்ல முடியவில்லை. இன்றிரவு இங்கே கீழே, சில கறுப்பின நண்பர்களும் அமர்ந்திருக்கிறார்கள், புதிதாக, இங்கே கீழே ஒலிப்பதிவு செய்கிறார்கள். கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. நன்றி, சகோதரர் ஜோசப். எனக்குச் சற்று தொண்டைக்கட்டல் இருந்தது. நன்றி. 14 இப்போது, நாம் அவரை நம் முழு இருதயத்தோடும் நேசிக்கிறோம், எனவே இன்றிரவு நாம் ஒரு சிறிய வேதபாடத்தை எடுத்துக்கொள்ளப் போகிறோம், அதன்பிறகு நான்-இருக்க-ஜெப வரிசையை நடத்த முயற்சி செய்ய விரும்புகிறேன், மற்றும்-ஏனென்றால் நாளை திங்கட்கிழமை நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், நீங்கள் ரயில்களைப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு இரவும் நான் உங்களை வெகுநேரம் இருக்கச் செய்துவிட்டேன், அதற்காக நீங்கள் என்னை மன்னிப்பீர்களா? மேலும் பல நேரங்களில் நான் ஆரம்பிக்கும்போது மிகவும் ஆர்வமடைந்து விடுகிறேன். அதைப் பிரசங்கம் என்று நான் அழைக்கலாமா? எப்படியாயினும், நான் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருக்கும்போது, சரி, நான் மிகவும் ஆர்வமடைந்து நேரத்தைப் பற்றிய எண்ணங்களையும் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். எனவே என்னோடு தங்கியிருந்தது உங்களுடைய நல்ல மனதைக் காட்டுகிறது, அது உங்களை என் முழு இருதயத்தோடு நேசிக்கச் செய்கிறது. இப்போது, நான் தேவனுடைய வேதாகமத் திலிருந்து 1 யோவான் 1-ம் அதிகாரம் 5-ம் வசனம் முதல் 7 வரை உள்ள சில வார்த்தைகளை வாசிக்க விரும்புகிறேன். நாம் 7-ம் வசனத்தை மட்டும் வாசிப்போம் என்று நான் நம்புகிறேன், அது சுருக்கமாக இருக்கும். உங்களால் முடிந்தால், நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் அந்த அதிகாரம் முழுவதையும் வாசியுங்கள். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். அது ஆச்சரியமாக இல்லையா? இப்போது அவருடைய வார்த்தையின் வாசிப்பை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேட்போம். 15 பரம பிதாவே, இன்றிரவு உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும், அது ஒவ்வொரு இருதயத்திற்கும் சென்று, ஒரு தங்குமிடத்தைக் கண்டுபிடித்து, இனி ஒருபோதும் விலகாதிருப்பதாக. அதை அருளுவீராக, ஆண்டவரே. இப்போது, பேசப்போகிற தகுதியற்ற நபரின் உதடுகளை விருத்தசேதனம் பண்ணும். கேட்கப்போகிற இந்த மக்கள் அனைவருடைய காதுகளையும் விருத்தசேதனம் பண்ணும். இந்த ஆராதனையின் மூலம் மகிமைப்படுவீராக, உம்முடைய அன்பான குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். இப்போது, இது மிகவும் அற்புதமான வாரமாக இருந்தபடியால், "ஐக்கியம் கொள்வதற்கான வழி" என்பதைப் பற்றி இன்றிரவு கொஞ்சநேரம் உங்களிடம் பேச விரும்புகிறேன். இப்போது, நமக்குத் தெரியும்... நான் இன்றிரவு என் ஆராதனையைத் தொடர இருந்தேன், சொந்த தேசத்தில் இருக்கும் இஸ்ரவேல் புத்திரர்கள்; நேற்றிரவு செங்கடலைக் கடக்கும்போது நாம் எங்கே விட்டோமோ, அங்கிருந்து யோசுவா அவர்களை அழைத்துச் செல்வது. ஆனால் இந்த ஜெப வரிசையில் எனக்கு நேரமிருக்காது, அதனால் நீங்கள் ரயில்களைப் பிடித்து, காலையில் வீட்டிற்குச் சென்று வேலைக்குச் செல்ல முடியும். 16 இப்போது, இது சுருக்கமாகவே இருக்கும், இதைக் குறித்து நாம் சுருக்கமாகவே உங்களிடம் பேச முடியும். ஆனால் எப்படி ஒவ்வொரு மனிதனும் ஐக்கியத்தை விரும்புகிறான். ஐக்கியத்தை விரும்பாத ஒருவரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை. அதாவது, மனதளவில் சீராக இருக்கும் எவரையும். இப்போது, நீங்கள் உங்களுக்கான ஐக்கியத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பலாம், நிச்சயமாக அது நம் ஒவ்வொருவருக்கும் உண்மையானதுதான். அதனால்தான் இன்றிரவு இந்த நல்ல மக்கள் அனைவரும், தாங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தில்கூட இந்த கட்டிடத்தில் நிரம்பியிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் இந்த வகையான ஐக்கியத்தை விரும்புகிறார்கள். அவர்கள் கிறிஸ்தவ ஐக்கியத்தை விரும்புகிறார்கள். அதனால்தான் இன்றிரவு நாம் வார்த்தையைச் சுற்றி ஐக்கியம் கொள்ள வந்திருக்கிறோம். நான் வார்த்தையை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? நீங்கள் ஏன் வார்த்தையை நேசிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஏனென்றால், மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று வேதாகமம் சொல்லுகிறது. எனவே பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை உணவாக உட்கொள்ளுகிறார். பின்பு நீங்கள் வார்த்தையைக் கேட்கும்போது... ஒவ்வொ ருவரும் அதைக் கேட்க விரும்புகிறார்கள், எதுவாக இருந்தாலும்... தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சிறிய இலக்கியத் துண்டுகளையும் அவர்கள் எடுத்து வாசிக்கிறார்கள். அவர்கள் வானொலியைக் கேட்கிறார்கள், சபைக்குச் செல்கிறார்கள், மேலும் பல காரியங்களைச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அந்த வார்த்தையைச் சுற்றியுள்ள ஐக்கியத்திற்காக ஏங்குகிறார்கள். 17 நாம் எப்படி ஒரு பூரணமான ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள இன்றிரவு தேவன் நமக்கு உதவுவாராக. எங்கு புயல்கள் வந்தாலும் சரி, நீங்கள் சரியோ அல்லது தவறோ, நீங்கள் இன்னமும் ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும். உங்கள் அன்பு பூரணப்படும்போதுதான் நீங்கள் ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும், அதுவே ஒரே வழி. என்னை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உங்களில் சிலரை நான் இனி பார்க்க முடியாவிட்டாலும், இதை நினைவில் கொள்ளுங்கள்: என் மையப்பொருள் "அன்பு எல்லாவற்றையும் மூடும்" என்பதுதான். கர்த்தராகிய இயேசுவின் மீட்கும் அன்பை நான் விசுவாசிக்கிறேன். எனக்கு இந்தப் பாடல் பிடிக்கும். விசுவாசத்தினால் அந்த நீரோட்டத்தை நான் கண்டதுமுதல், உம்முடைய வழியும் காயங்கள் அளிக்கின்றன, மீட்கும் அன்பே எனது மையப்பொருளாக இருக்கிறது, நான் மரிக்கும்வரை அதுவே இருக்கும். 18 எந்த ஆவிக்குரிய வரத்தைப்பற்றியும் எதுவும் தெரியாத, ஆனால் ஒருவரிலொருவரும் கிறிஸ்துவிடமும் மிகவும் அன்பாக இருக்கும் ஒரு சபையை நான் கொண்டிருக்கவே விரும்புவேன்... கவனியுங்கள், ஒரு நிமிடம். சபையில் செயல்படும் ஒவ்வொரு ஆவிக்குரிய வரத்தைக் காட்டிலும், நான் அதையே கொண்டிருக்க விரும்புவேன். இப்போது, அது ஒரு பெந்தெகொஸ்தே கூட்டத்தில் கடினமாகத் தோன்றலாம், ஆனால் நான் அதையே கொண்டிருக்க விரும்புவேன். எங்கே வரங்கள் இருக்கிறதோ, அவை ஒழிந்துபோம். எங்கே வரங்கள் இருக்கிறதோ, அவை குழப்பத்தைக் கொண்டுவரும். எங்கே வரங்கள் இருக்கிறதோ, அவை கேள்விக்குள்ளாக்கப்படலாம். ஆனால் எங்கே அன்பு இருக்கிறதோ, அது பூரணமானது. அது சரிதான். உங்களுக்குப் பூரண அன்பு இருந்தால், உங்களுக்குப் பூரண வரங்கள் இருக்கும். அது சரிதான். எனவே முதலில் அன்புடன் செயல்படுங்கள். அது ஐக்கியத்தைக் கொண்டுவருகிறது, மற்றும் ஐக்கியம் வரங்களைக் கொண்டுவருகிறது. இப்போது, அதற்குக் காரணம்... ஐக்கியத்தைப் போல வித்தியாசமான காரியங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? ஏனென்றால், முதலாவதாக, மனிதன் ஐக்கியங்கொள்வதற்காகவே உண்டாக்கப் பட்டான். இப்போது, இன்றிரவு சற்று யோசித்துப் பாருங்கள்... திறந்தவெளியில் வேட்டையாடவும் மீன்பிடிக்கவும் நான் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறேனோ, ஆனாலும், எனக்குத் தெரிந்த எதைக்காட்டிலும் அந்த மலையின் உச்சிக்குச் சென்று தேவனிடம் பேசுவதற்கே என் இதயம் அதிகமாகப் பசியாயிருக்கிறது. பாருங்கள், நான்-நான் தனியாக இருக்க விரும்புகிறேன்; என்னிடமிருந்து நூறு மைல் தூரம் வரை யாரும் இல்லை என்பதை நான் அறிய விரும்புகிறேன். நான் மக்களை நேசிக்கிறேன், ஆனால் நான் மக்களுக்கு ஊழியம் செய்யக்கூடிய ஒரே வழி, முதலில் தேவனிடமிருந்து செய்தியைப் பெற்றுக்கொள்வதுதான். 19 எனக்கு இந்த ஒரு காரியம் தெரியும், நான் பிரசங்கிக்கிற மறுபடியும் பிறந்த ஒவ்வொரு நபருடனும், நான் ஐக்கியம் கொள்ள எனக்கு ஒரு நித்தியம் இருக்கும் என்று என் விசுவாசம் எனக்குச் சொல்கிறது. ஆனால் இருளிலிருந்து இன்னும் அநேகரை உள்ளே கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். இதோ இன்றிரவு மதுபானக் கடைகளில் தொலைந்துபோன நம்முடைய ஏழை சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். என் மகனும் மற்றவர்களும் அதைப் பார்க்க விரும்பியதால், நேற்று இரவு நான் அந்த குடிசைப் பகுதியைக் கடந்து சென்றேன், அங்கே அந்த ஏழை மக்கள் குடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அவர் களுக்கு- தங்களுக்கு என்ன வேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை என்று எண்ணினேன். நான் நினைத்தேன், "அவர்களுக்கு மட்டும் என் இயேசுவைத் தெரிந்திருந்தால், அவர்கள் நிச்சயமாக அங்கே இருந்திருக்க மாட்டார்கள்." பாருங்கள்? அவர்கள் சிக்கியிருக்கும் அந்தச் சீரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே காரியம் அதுதான்; எந்த மருந்தும் இல்லை, ஒன்றுமில்லை. இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே எந்தவொரு உதவியிலிருந்தும் ஒரு குடிகாரன் முற்றிலும் முழுமையாக அழிக்கப்பட்டவனாவான். அது சரிதான். குணமடைய வழியில்லை. நான் பௌரியில் (Bowery) இருந்திருக்கிறேன். பிரான்சில் உள்ள பிகல்லில் (Pigalle), என்னால் கண்டுபிடிக்க முடிந்த மிகக் கீழான குடிசைப் பகுதிகளுக்குச் சென்று, பேசியிருக்கிறேன், ஜெபித்திருக்கிறேன், மற்றும் பல காரியங்களைச் செய்திருக்கிறேன். அந்த மக்களுக்கான ஒரே நம்பிக்கை இயேசு கிறிஸ்துவின் இரத்தம்தான், அது ஒன்றே, அது ஒன்றே நம்பிக்கை. 20 இப்போது, எது மனிதர்களை ஐக்கியம்கொள்ள விரும்பச் செய்கிறது? அவன் அப்படி உருவாக்கப்பட்டபடியால்தான்; அவன் ஐக்கியம் கொள்வதற்காகவே உருவாக்கப் பட்டான். ஐக்கியம் என்றால் என்ன? நாளை முதல் நான் நான்கு நாட்கள் வாகனம் ஓட்ட வேண்டும். சுமார் இரண்டாயிரத்து ஐநூறு மைல்கள் ஓட்டுவதற்கு எனக்கு நான்கு நாட்கள் இருக்கிறது. அதை நானே ஒரு பழைய சிறிய ட்ரக்கில் ஓட்டிச் செல்ல வேண்டும். என் நண்பர் ஒருவர், என்னுடன் ஐக்கியம் கொள்வதற்காகவே, என்னோடு அந்த முழு தூரமும் பிரயாணம்பண்ணி, பின்பு அவர் தனியாக ஒரு கிரேஹவுண்ட் (greyhound) பேருந்தில் திரும்பிச் செல்வதற்காக வருகிறார், இன்று மதியம்தான் அதைப் பற்றிச் சொல்லிவிட்டுச் சென்றார். அது அற்புதமானதல்லவா? உங்களுக்குத் தெரியுமா, அதுபோன்ற நண்பர்களை நான் மதிக்கிறேன். தேவன் அவருடைய அந்தச் சிறிய சுவிஸ் (Swiss) இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. நான் அவரை நேசிக்கிறேன். என்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மலைகள், புல்வெளிகள் என நான்கு நாட்கள், அதோ அங்கே, ஐக்கியம் கொள்வதற்காகவே பிரயாணம் செய்ய விரும்புகிறார். மிகவும் பிரியமான சகோதரர்களாக, நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கிறோம். பின்னர் திரும்பிச் செல்வதற்காக, விஸ்கான்சினில் உள்ள ஷாவானோவுக்கு (Shawano, Wisconsin) ஒரு பேருந்திலோ அல்லது வேறு எப்படியோ அவர் முழு தூரமும் பிரயாணம் செய்ய வேண்டும். ஓ, அது என் இருதயத்தைத் துள்ளச் செய்கிறது. இப்போது, தேவன் தமது பிள்ளைகளோடு ஐக்கியம்கொள்ள மிகவும் ஏங்குகிறபடியால், அவர் மகிமையிலிருந்து முழுவதுமாகக் கீழிறங்கி வந்து, நம்மோடு ஐக்கியம் கொள்ளும்படி மரித்தார். அது ஆச்சரியமானதல்லவா? சிந்தித்துப் பார்க்கவே மிகவும் அற்புதமாக இருக்கிறது... 21 இப்போது, ஆதியிலே மனிதனுக்கு ஐக்கியம் இருந்தது. முதலாவதாக, நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ள முடிந்தால், பின்னர் கவலைப்படத் தேவையில்லை, மற்ற காரியங்களைத் தேவன் பார்த்துக்கொள்வார் என்பதை நாம் உணருகிறோம். நான் பேச விரும்பும் முக்கிய காரியம்... தேவனோடு எப்படி ஐக்கியம்கொள்வது, ஒருவரோடொருவர் எப்படி ஐக்கியம்கொள்வது என இதை நான் இங்கே நான்கு பகுதிகளாக வைத்திருக்கிறேன்; ஆனால் அதில் தேவனோடு ஐக்கியம் கொள்ளுதல் என்ற ஒரு பகுதியைப்பற்றி மாத்திரமே நாம் பேச விரும்புகிறோம். இப்போது, ஜெப வரிசையைச் சரியான நேரத்தில் தொடங்குவதை உறுதிசெய்ய, நான் அங்கிருக்கும் அந்த கடிகாரத்தைப் பார்க்கப் போகிறேன். ஆனால் தேவனோடு ஐக்கியம் என்பது என்ன... மனிதர்கள் கொண்டிருந்த முதலாவது மற்றும் அசல் ஐக்கியம் தேவனோடுதான் இருந்தது. ஆதாம் ஐக்கியம் கொள்வதற்குப் பூமியில் வேறு எந்தவொரு ஜீவராசியும் இல்லை, தேவன் மட்டுமே இருந்தார். பிறகு தேவன் அவனுக்கு ஏற்ற துணையை, அவனுடைய ஒரு பகுதியான மனைவியை உருவாக்கினார். 22 சூரியன் மறைந்த மாலை வேளைகளில், அது மேற்கே வெகு தொலைவில் மறையும்போது, தேவனுடைய பெரிய பேராலயமாகிய அந்தப் பெரிய பசுமைமாறா மரங்களின் ஊடாக ஒளிக்கற்றைகள் இறங்கி வருவதையும், அந்த மரங்களின் உச்சிகளில் காற்று வீசும் ஒரு சத்தத்தைக் கேட்பதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, மற்றும் ஆதாமும ஏவாளும் அங்கேயுள்ள தோட்டத்தில், தேவனுடைய அந்தப் பெரிய பேராலயத்தில் அமர்ந்து தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அப்படிச் செய்யவே ஏங்குகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஐக்கியம் கொள்ளவே ஏங்குகிறான், அது சரிதானே? ஐக்கியம் கொள்வதற்கான ஒரு இடத்தைத் தேடி, மலைகளின் உச்சிக்குச் சென்றும், ஏரிக்கரைக்குக் கீழிறங்கிச் சென்றும், தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த மனிதர்களின் கதைகளை நான் படித்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் கல்வாரிக்குத் தவிர வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை; அதுவே ஒரே வழி. ஒரு வழி இருக்கிறது, நீங்கள் ஐக்கியத்திற்குச் செல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 23 கவனித்துப் பாருங்கள், இது இந்தக்காலத்தில் மட்டும் உள்ள வழியல்ல... இது எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது. யோபுவைச் சற்று எண்ணிப்பாருங்கள், வேதாகமத்தின் மிகப்பழமையான புத்தகம், அவர் ஐக்கியத்திற்காக ஏங்கினார். ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசித்தார். மேலும் அவர், ஒரு குழந்தை சொல்லும் விதத்தில், "ஓ, நான் மட்டும் அவரிடம் செல்ல முடிந்தால்? அவர் எங்கே வசிக்கிறார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் சென்று அவர் கதவைத் தட்டி, கொஞ்ச நேரம் அவரிடம் பேசுவேனே" என்றார். நாம் அனைவரும் அதைச் செய்ய விரும்பமாட்டோமா? ஆனால் சிந்தித்துப் பாருங்கள், அவருடைய கதவைவிட அவர் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். உங்கள் இருதயமே அவருடைய கதவு. இன்றிரவு அவர் மிகவும் நெருக்கமாக இருக்கிறார், உங்கள் வலது கரத்தைவிட அவர் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவர் உங்களில் ஒரு பகுதி. அவர் இங்கே இருக்கிறார் என்பதையும், அவர் எப்படி நம்மோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார் என்பதையும் நம்மால் உணர முடிந்தால்... ஐக்கியத்திற்கான அவருடைய இருதயம் நம்முடையதை விடப் பெரியது. அவர் நம்மை அப்படி ஆக்கியதற்குக் காரணம், நாம் அவருடைய சந்ததியாயிருப்பதே. அதுவே நம்மை ஐக்கியத்திற்காக ஏங்கச் செய்கிறது. 24 அதுவே ஒரு தாயைத் தன் குழந்தைக்காக மரிக்கச் செய்கிறது. ஏன்? அதுவே ஒரு தந்தையைத் தன் மனைவிக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கச் செய்கிறது. ஒரு கணவன், ஒரு உண்மையான கணவன் தன் மனைவிக்காகத் தன் ஜீவனைக் கொடுப்பான். ஏன்? ஏனென்றால் கிறிஸ்து தமது மனைவியாகிய சபைக்காகத் தமது ஜீவனைக் கொடுத்தார். அது உங்களில் உள்ள ஒரு இயல்பு. அது ஒரு தாயைத் தன்னைக் குறித்துச் சிந்திக்காமல், தன் தலைமுடி தீப்பற்றி எரிகையிலும், தன் உடைகள் தீப்பற்றி எரிகையிலும், எரியும் தீக்குள் பாய்ந்து சென்று, தன் குழந்தையைப் பிடித்துக்கொண்டு வெளியே ஓடிவரச் செய்யும். ஏன்? அது ஒரு பெற்றோரின் அன்பு. தேவனே முதலாவது மற்றும் உண்மையான பெற்றோர். அங்கிருந்துதான் அந்த இயல்பு வருகிறது. ஏனென்றால் பெண்தான் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதனால்தான் தேவன் கீழே வந்து, மாம்சத்தில் வெளிப்பட்டு, தம்மைக்குறித்து எந்தச் சிந்தனையும் கொள்ளாமல், நம்மைத் தம்மோடு ஐக்கியத்திற்குள் கொண்டு வரும்படியாக, அந்த அக்கினி ஜுவாலைக்கே, வேதனையின் மிகக் கொடிய நிலைக்குச் சென்றார். "என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது." நாமும் தேவனும், ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் அந்த அற்புதமான ஐக்கியம் எத்தகையது... 25 இப்போது, தேவன் இந்த ஐக்கியத்தை விரும்பினார். ஆக, ஆதாம் செய்ததைப் போல நேரடியாகப் பேசுவதில் இருந்து மனிதனைப் பிரித்தது எது, தடுத்து நிறுத்துவது எது? எந்தப் பாவமும் அறியாத ஆதாமை அல்லது அழகாய் தோட்டத்தில் நின்றுகொண்டிருக்கும் அவனது மனைவி ஏவாளை ஏதேன் தோட்டத்தில் வைத்து நான் அடிக்கடி நினைத்துப் பார்த்திருக்கிறேன்... அப்போது லியோ (Leo) என்ற சிங்கம் அங்கே வரும், இதோ புலி வருகிறது, வெளியின் அந்தப் பெரிய மிருகம் இந்த பேராலயத்திற்குள் வந்து, தங்கள் முழங்கால்களில் மண்டியிடுகின்றன, மற்றும் அவை... மிருகங்களுக்குக்கூடக் கொல்லும் சுபாவம் எதுவும் இருக்கவில்லை, அவை... எங்கும் மரணம் என்பதே இல்லை. காட்டுமிருகங்கள் உங்களைக் காயப்படுத்த விரும்புவதற்குக் காரணம் பிசாசுதான். காடுகளிலோ அல்லது பாலைவனத்திலோ உள்ள மிகவும் பயங்கரமான மிருகத்தின் மீது உங்களால் சரியான வகையான அன்பை உங்கள் இருதயத்தில் உருவாக்க முடிந்தால், அந்த மிருகம் உங்களுக்குத் தீங்கு செய்யாது. அது சரிதான். என் அனுபவத்தால் நான் அதை அறிவேன். ஆனால் உங்களால் அப்படி நடிப்பைக் காட்டமுடியாது. நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா இல்லையா என்பதை அது அறியும். அதை அறியும்படியான ஏதோ ஒன்று அதனிடம் இருக்கிறது. ஆனால் நீங்கள் உண்மையிலேயே பயப்படவில்லை என்றால், உங்களைக் காயப்படுத்தும் எதையும் நான் பார்த்ததில்லை, அது ஒரு சிங்கமாகவோ அல்லது எதுவாகவோ இருந்தாலும் பரவாயில்லை, அது உங்களை விட்டு விலகிச் சென்றுவிடும். ஆனால் நீங்கள் ஓடினாலோ, அல்லது நீங்கள் பயப்படுவது போல் நடித்தாலோ, அல்லது வேறு ஏதாவது செய்தாலோ, நீங்கள் கொல்லப்படுவீர்கள். எனவே உங்களால் அதை சும்மா உருவாக்கிவிட முடியாது; நீங்கள் பயப்படவில்லை என்பதை நீங்கள் உங்கள் இருதயத்தில் உண்மையிலேயே அறிந்திருக்க வேண்டும். 26 இன்றிரவு மனிதனின் பிரச்சனை அதுதான்; இன்றிரவு மக்களின் பிரச்சனை அதுதான்; நீங்கள் பயப்படுகிறீர்கள். முழு சுவிசேஷ மக்கள் அல்லது வேறு எந்த மக்கள் மீதும் உள்ள மிகப்பெரிய சாபம் அதுதான்; ஏனென்றால் அவர்கள் பயப்படுகிறார்கள். தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார், ஆனால் அதைக்காக அவருடைய வார்த்தையை எடுத்துக்கொள்ள நீங்கள் பயப்படுகிறீர்கள். இன்றிரவு நீங்கள் பயப்படாமல் இருந்திருந்தால், நீங்கள் விசுவாசத்தால் உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள், தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதை அறிந்திருப்பீர்கள், மேலும் அந்த காரியம் உங்களை விட்டு முற்றிலுமாக விலகிப் போயிருக்கும். பயம், அச்சம்... நான் அதைக் கவனித்திருக்கிறேன். அதனால்தான் நான் சுகமளித்தலை அவ்வளவாக விசுவாசிப்பவனாக இருக்கிறேன். உங்களால் அந்தப் பயத்திலிருந்து விடுபட்டு, அதன் இடத்தில் அன்பைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை நான் அறிவேன். மனிதனை ஆளுகை செய்யும் இரண்டு தன்மைகள் மட்டுமே உள்ளன, அவற்றில் ஒன்று-முடிவுகளைக் கொண்டுவரும் விசுவாசம்; மற்றொன்று பயம், அதில் எந்த மதிப்பும் இல்லை. விசுவாசம் தேவனால் உண்டானது. பயம் பிசாசினால் உண்டானது. பயம் உங்களைச் சோர்வடையச் செய்கிறது; பயம் உங்களைச் சந்தேகிக்க வைக்கிறது. காலையில் நான் மரிக்கப் போகிறேன் என்றால், அதைப்பற்றிக் கவலைப்படுவதால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்? காலையில் எனக்கு மின்சாரம் பாய்ச்சி மரண தண்டனை விதிக்கப்படப் போகிறது என்றால், என் வாழ்க்கை நாளை காலை முடிவடைய வேண்டும் என்றால், அதைக் குறித்துக் கவலைப்படுவதால் எனக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது? 27 "சரி," நீங்கள் சொல்லலாம், "விசுவாசம் வைத்திருப்பதால் என்ன பயன்?" விசுவாசம் என் மன்னிப்பில் கையெழுத்திட முடியும், நிச்சயமாக; விசுவாசத்தில் மதிப்பு இருக்கிறது. சோர்வடைய வேண்டாம்; பயப்பட வேண்டாம்; கலக்கமடைய வேண்டாம்; விசுவாசம் வைத்து நம்புங்கள். நீங்கள் விசுவாசம் கொள்வதற்கான ஒரே வழி, முதலில் நீங்கள் அன்பைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அன்பு விசுவாசத்தை உருவாக்குகிறது. பூரண அன்பு... புரிந்துகொள்ளுங்கள். பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். விசுவாசத்தினால், அன்பினால் எதை யெல்லாம் ஜெயித்தேன் என்பதை, வன விலங்குகளுடனான அனுபவங்களை உங்களுக்குச் சொல்ல எனக்கு நேரம் இருந்திருக்கக் கூடாதா என்று விரும்புகிறேன். அந்த பழைய ஓபோஸம் (opossum) மிருகம் மேலே அனுப்பப்பட்டதைப் பற்றி நான் கடந்த இரவு உங்களிடம் சொன்னேன். ஒரு நாள் ஒரு கொடூரமான காளையை நான் பார்த்தேன், அது என்னைக் கொல்ல வந்தது. இது பதிவில் இருக்கிறது; அப்போது நான் ஒரு வனவிலங்கு காவலராக (game warden) இருந்தேன். ஒரு நோயாளியான மனிதனுக்காக ஜெபிக்க நான் மலையின் மீது சென்று கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும், ஆனால் உங்கள் கையில் துப்பாக்கியுடன் ஒரு நோயாளியிடம் ஜெபிக்க நீங்கள் செல்லமாட்டீர்கள். எனவே நான் துப்பாக்கியை எடுத்து அந்தப் பழைய சிறிய ட்ரக்கில் வைத்துவிட்டு, வயல்வெளியைக் கடந்து சென்றேன். நான் வயலுக்கு வெளியே சென்றேன், எனக்குத் தெரியும்... இந்தக் கொலையாளி காளை அங்கே வெளியே இருக்கிறது என்று நான் நினைத்திருக்க வேண்டும், மூன்று மாதங்களுக்கு முன்புதான் பண்ணையில் திரு. பர்க்ஸ் (Mr. Burks) என்ற ஒரு கறுப்பின மனிதனை அது கொன்றது, பின்னர் டர்ஹாம் (Durham) கால்நடைகளை வைத்திருந்த மக்களுக்கு அதை அவர்கள் விற்றுவிட்டார்கள். 28 பின்பு நான் வயலைக் கடக்கத் தொடங்கியபோது, ஒரு பெரிய திறந்தவெளியில், என்னிடமிருந்து சுமார் முப்பது கெஜம் தூரத்திற்கு மிகாமல், இந்தப் பெரிய ஆள் எழுந்து, தன் கொம்புகளைக் கீழே தாழ்த்தி, ஒரு பெரிய கர்ஜனையை எழுப்பியது, நான் எதைப்பற்றிப் பேசுகிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்தால் சரி. அங்கே அது இருந்தது, இப்படிப்பட்ட கொம்புகளுடன். இதோ அது என் பக்கம் வருகிறது. முதலில் அது என்னைப் பயமுறுத்தியது. நான்-நான் ஒரு மரத்தைத் தேடினேன், அங்கே எந்த மரமும் இல்லை. அது என்னைவிட வேகமாக வேலிக்கு ஓடிவிட முடியும் என்று எனக்குத் தெரியும். எனவே நான் நினைத்தேன், "சரி, அவ்வளவுதான்." அப்போது, ஏதோ ஒன்று நடந்தது. ஓ தேவனே, அது விலகிப் போவதற்குப் பதிலாக அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருக்கும். ஏதோ ஒன்று நடந்தது. இன்றிரவு இங்குள்ள ஒவ்வொ ருவருக்கும் சுகமடைவதற்குத் தேவையான அளவு அதை தேவன் நடக்கச் செய்வார் என நான்-நான் விரும்புகிறேன். பாருங்கள்? 29 நான் அந்தக் காளையைக் கண்டு பயப்படாதபடிக்கு ஏதோ ஒன்று நடந்தது. நான் அதற்காகப் பரிதாபப்பட்டேன், ஏனென்றால் நான் அதைத் தொந்தரவு செய்தேன்; நான் அதன் வயலில் இருந்தேன். அது என்னைத் தொந்தரவு செய்யாமல் அங்கே படுத்திருந்தது. நான் வழியே வந்து அதை எழுப்பிவிட்டேன். எனவே அதற்காக நான் பரிதாபப்பட்டேன். இப்போது, நீங்கள் அதை சும்மா நடிக்க முடியாது; அது அங்கே இருக்க வேண்டும். விசுவாசமும் அப்படித்தான்; நீங்கள் நடிக்க முடியாது; நீங்கள் அதை உண்மையிலேயே கொண்டிருக்க வேண்டும். பிசாசு அதை அறிவான். இந்த ஆள் தன் தலையைக் கீழிறக்கி, தன்னால் முடிந்தவரை வேகமாக என்னை நோக்கி வரத் தொடங்கியது. இந்த மேடையில் நிற்கும் என் அன்பான சகோதர சகோதரிகள் எவரைக் கண்டும் நான் எப்படிப் பயப்படமாட்டேனோ, அதேபோல அந்தக் காளையைக் கண்டும் நான் பயப்பட வேயில்லை. அது எனக்கு சுமார் ஐந்து அடி தூரத்திற்குள் ஓடி வந்து, நின்றது, மிகவும் திகைத்துப்போய் என்னைப் பார்த்தது; அது வலதும் இடதுமாகப் பார்த்தது. நான் சொன்னேன், "நண்பனே, உன்னைத் தொந்தரவு செய்ததற்கு என்னை மன்னித்துவிடு." நான் சொன்னேன், "இப்போது, நீ தேவனுடைய சிருஷ்டி, நான் தேவனுடைய ஊழியன். இப்போது, உன்னை உண்டாக்கின சிருஷ்டிகரே என்னையும் உண்டாக்கினார், நான் அவருடைய ஊழியன். அவருடைய நோயாளியான பிள்ளைகளில் ஒருவருக்காக ஜெபிக்க நான் மலையைக் கடந்து பிரயாணப்பட்டுச் செல்கிறேன். நீ அங்கே படுத்திருப்பாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் இந்த வழியே வந்து உன்னைத் தொந்தரவு செய்திருக்க மாட்டேன். எனவே இப்போது, சிருஷ்டிகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, திரும்பிப் போய் படுத்துக்கொள்." 30 நியாயத்தீர்ப்பு ஆசனத்தின் முன்பாக இது வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்தக் காளை சில நிமிடங்கள் என்னைப் பார்த்தது, திரும்பி, நடந்து சென்று, படுத்துக்கொண்டது. நான்-என் கன்னங்களில் கண்ணீர் வழிய நான் அங்கே நின்றேன். நான் அந்தக் காளையின் ஐந்து அடி தூரத்திற்குள் நடந்தேன், அது தன் தலையைத் திருப்பி என்னைப் பார்க்கக்கூட இல்லை. ஏன்? அதை வெறுப்பதற்குப் பதிலாக, நான் அதை நேசித்தேன். அன்பு எதையும் ஜெயிக்கும். சரிதான். நான் கெட்டுப்போகாதபடிக்கு தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, என்மேல் இவ்வளவு அன்புகூர்ந்தார் என்பதை நான் அறிந்தபோது, அதுவே என் இருதயத்தை ஜெயித்தது. நான் இந்த உலகில் ஒரு பாவியாகப் பிறந்து, கெட்டுப்போய்க்கொண்டிருந்தேன் என்பதையும், என் ஜீவன் மீட்கப்படுவதற்காகத் தேவன் என்னை நேசித்துத் தம்முடைய குமாரனைக் கொடுத்தார் என்பதையும் அறிந்தேன். பின்பு நான்-என்னால் இனியும் வெறுக்க முடியவில்லை; நான் நேசிக்க வேண்டியதாயிற்று. நீங்கள் காணும் இந்த முடிவுகளைக் கொண்டுவருவது அதுதான். அது அன்புதான். 31 எனக்குத் தெரியவில்லை. நான் இதைச் சொல்லியிருக்கலாம், இதற்கு முன்பும் நான் சொல்லியிருக்கிறேன், நடந்த நூற்றுக்கணக்கான சிறிய காரியங்களில் இதுவும் ஒன்று. ஒரு நாள் நான் என் முற்றத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்தேன். நான் பின் முற்றத்திற்குப் போக வேண்டியிருந்தது, நான் பின்னால் போவதற்குள் முன் முற்றத்தில் புல் வளர்ந்துவிட்டது, ஏனென்றால் மக்கள் ஜெபிக்கப் படுவதற்காகவும் மற்ற காரியங் களுக்காகவும் வருவதால், இதிலிருந்து... பாருங்கள், ஜோசப் சற்று முன்பு சொன்னது போல், இது வெறும்... இங்கே, இது வெறும்-இது வெறும் சிகாகோ. வீட்டில், இது உலகெங்கிலும் உள்ளது (பாருங்கள்?), உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். மேலும் நான் இந்தப் புல்லை வெட்டிக் கொண்டிருந்தபோது, நான் உள்ளே ஓடினேன், அதை மறந்துவிட்டேன், அங்கே பின்புறம் ஒரு குளவியின் கூடு இருந்தது. நான் இந்த புல் வெட்டும் இயந்திரத்தால் அந்த வேலியை இடித்தேன், நான் குளவிகளால் மூடப்பட்டேன், அவை பெரிய பெரிய கூட்டத்தினர்; அவர்கள் உங்களை மோதும்போது உங்களை கீழே தள்ளிவிடுவார்கள். முதலில் நான் பயந்தேன், உண்மையாகவே. சட்டை போடவில்லை... மேலும் ஏதோ ஒன்று அல்லது மற்றொன்று நடந்தது. நான்-நான் அந்த கூட்டத்தினரை இடித்ததற்காக வருந்தினேன், நான் கொட்டப்படுவேன் என்று பயந்ததால் அல்ல, ஆனால் உண்மையாக, இது சிறு பிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது, ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்க முடிந்தால். நாம் இன்னும் கொஞ்சம் குழந்தைத்தனமாக இருக்க முடிந்தால், கல்லூரியின் மாணவர்களைத் திருப்புவது தேவனின் எளிமைதான். அந்தக் காரியங்களில் எளிமையாக இருங்கள். ஒரு குழந்தையைப் போல, சாய்ந்து நம்புங்கள். உங்களை நீங்களே கட்டாயப்படுத்திக் கொள்ள முயற்சிக்காதீர்கள்; அமைதியாக இருந்து அதை நம்புங்கள். அவ்வளவுதான். உங்களை நீங்களே உணர்ச்சி வசப்படுத்திக்கொள்ள முயற்சிக் காதீர்கள், "ஓ தேவனே, அல்லேலூயா, கடிந்து கொள்கிறேன்." அது நல்லது-நல்லது இல்லை. இல்லை, அதை நம்பி தொடர்ந்து நடங்கள். அவ்வளவுதான். 32 அதனால் அது நடந்தபோது, நான் நினைத்தேன், "அந்த பரிதாபமான சிறிய கூட்டத்தினர் இப்போது மேலே தங்கள் கூட்டில் இருக்கிறார்கள், இங்கே நான் வேலியை இடித்து அவர்களைத் தங்கள் கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டேன்," நான் தள்ளிக்கொண்டிருந்த அந்த பெரிய பழைய புல் வெட்டும் இயந்திரத்தால். மேலும் நான் சொன்னேன், "நீங்கள் தேவனின் சிறிய சிருஷ்டிகள், நான் இந்த வேலியை இடித்ததற்காக வருந்துகிறேன். நான்-நான் உங்களைத் தொந்தரவு செய்ததற்காக வருந்துகிறேன். இப்போது, நான் தேவனின் ஊழியக்காரன், நான் அவருடைய வியாதியுள்ள பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறேன். நான் அவசரமாக இந்தப் புல்வெளியை வெட்ட வேண்டும். எனவே இப்போது, நீங்கள் நேராக உங்கள் கூட்டிற்குள் விரைந்து செல்லுங்கள்; நான் இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே." நான் என் புல் வெட்டும் இயந்திரத்தை மீண்டும் துவக்கிவிட்டு நிறுத்தினேன். நான் அந்த கயிற்றை இழுத்து அப்படியே துவக்கினேன், அந்த தேனீக்கள் என் வெற்றுத் தோள்களைச் சுற்றிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன, அவை நேராகத் திரும்பிப் போய் தங்கள் கூட்டிற்குள் சென்றன, கொஞ்சமும் கொட்டாமல். அன்பு. என்னால் அதை உருவாக்க முடியாது; என்னால் அதை வரவழைக்க முடியாது; தேவன் அதைத் தர வேண்டும். 33 அதுதான் இன்றிரவு அங்கே இருக்கிறது. தேவன் அதைத் தர வேண்டும். பின்பு அன்பு ஒரு ஐக்கியத்தை உருவாக்குகிறது. இப்போது, தேவன் அங்கே பின்னால் சொன்னபோது... பாவம் அந்த தெய்வீக அன்பைப் பிரித்த அந்த நாளில், தேவன் ஆதாமையும் ஏவாளையும் குறிப்பிட்ட இந்தக் கனிகளைச் சாப்பிட வேண்டாம் என்று சொன்னார், அவர்கள் சாப்பிட்டார்கள், பாவம் பிரிவினையைக் கொண்டுவந்தது. பாவம் பிரிவினையினால் பகையை, வஞ்சகத்தை, சண்டையை, பொறாமையைக் கொண்டுவந்தது. அது சரியா? என்ன நடந்தது? அவர்கள் தெய்வீக அன்பிலிருந்து பிரிந்துவிட்டார்கள். நீங்கள் தெய்வீக அன்பிலிருந்து பிரியும்போது, அதன் பின்பு உங்களால் உங்கள் சகோதரனின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட முடியாது. அதற்காக நீங்கள் அவனைக் கத்திக் கடிந்துகொள்ள வேண்டும். அது சரிதான். உங்களால் சகோதரியின் தவறுகளை இனி கண்டுகொள்ளாமல் விட முடியாது. ஏனென்றால் நீங்கள் அந்த தெய்வீகப் பகுதியிலிருந்து, அந்த அன்புப் பகுதியிலிருந்து விலகிவிட்டீர்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே கர்த்தராகிய இயேசுவை நேசித்தால், சகோதரியோ அல்லது சகோதரனோ உங்களுக்கு ஏதாவது செய்தால், "ஓ, நல்லது, அது பரவாயில்லை, அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை." கிறிஸ்து கொண்டிருந்த அன்பின் விதம் அதுதான், "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே." 34 அவர் என் பாவங்களை எனக்கு விரோதமாகப் பிடித்து வைத்திருந்தால் என்ன ஆவது? நான் எவ்வளவு மோசமான நபர், ஆனால் அவர் என்னை அவ்வளவு அதிகமாக நேசித்தபடியால் அவற்றிற்காக என்னை மன்னித்தார். நான் அழிந்துபோன நிலையில் இருந்தபோது, அவர் என்னை மன்னித்தார். அவர் என்னை நேசித்தார், ஒரு தூய்மையான அன்பு. தேவனுடைய வார்த்தையைத் தன் இருதயத்தில் வைத்திருக்கும் தூய்மையான அன்பிலிருந்து ஆதாம் தன்னைப் பிரித்துக்கொண்டபோது, அவன் அதைச் செய்தபோது, பின்பு அவன் தொடங்கினான்... இந்த மற்ற குணங்கள் உள்ளே வருகின்றன: வஞ்சகம், பொறாமை, சண்டை, பகைமை மற்றும் பல. இப்போது, தம்முடைய பிள்ளைகள் பிரிந்துவிட்டதை தேவன் கண்டபோது, அவர் ஐக்கியத்திற்காக கீழே இறங்கி வந்தார், அவரை வரவேற்க அங்கே ஒருவரும் இல்லை. இயேசுவின் பாதங்களைக் கழுவிய பெண்ணைப் பற்றி மற்றொரு நாள் இரவு நான் பிரசங்கித்ததை நினைவிருக்கிறதா? அவர் பரிசேயர்களால் வரவேற்கப்படவில்லை. இன்றிரவு அவர் அநேக மக்களிடம் வரவேற்கப்படவில்லை. அநேக சபைகளில், அநேக நகரங்களில் அவர் வரவேற்கப்படவில்லை. 35 இஸ்ரவேல் தங்கள் தேசங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பாருங்கள். அங்கே இருந்தது, நான் நம்புகிறேன் அது காத், அவர்களில் ஒருவர், ஒருவேளை, அந்தப் பாதி கோத்திரம்; அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கடந்து போகவில்லை; அவர்கள் இந்த பக்கத்திலேயே தங்கிவிட்டார்கள், எல்லையிலே. இயேசு அதே மக்களைச் சந்தித்தார். தேவனின் அன்பின் முழுமையான நன்மைகளுக்கு வெளியே தங்கியிருப்பதன் விளைவுகளைப் பாருங்கள். இயேசு அவர்களைச் சந்தித்தபோது அவர் கடாராவுக்குச் சென்றார்; அங்கேதான் அவர்கள் குடியிருந்தார்கள்; அங்கேதான் அவர்கள் செய்தார்கள்... அங்கேதான் அவர்கள் வந்தார்கள், சரியாக அங்கே. மேலும் அவர்களின் மனப்பான்மை இன்னும் அதே வழியில்தான் இருந்தது. ஏனென்றால் அது-அவர்களுக்கு இருந்தது-அந்த கூட்டத்தை நடத்துவதற்கு அவர்களுக்கு ஒரு கூட்டப் பன்றிகள் நஷ்டமானது, அவர்கள் இயேசுவைத் தங்கள் தேசத்தை விட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அதோடு எதையும் வைத்திருக்க விரும்பவில்லை; அவர்களுக்கு அவர்களின் சொந்த வழிகள் இருந்தன; அவர்களுக்கு அவர்களின் சொந்த சபைகள் இருந்தன. அவர்கள் இயேசுவோடு எதையும் வைத்திருக்க விரும்பவில்லை, அதனால் அவர்கள் அவரை தேசத்தை விட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 36 ஆனால் அவர் எப்படியும் சென்றார் ஏனென்றால் ஒரு ஆத்துமா அவருக்காக அழைத்துக் கொண்டிருந்தது. சற்று யோசித்துப் பாருங்கள், அந்தப் புயலடிக்கும் ஏரியைக் கடந்து, தேவையிலுள்ள ஒரு ஆத்துமாவைக் கண்டுபிடிக்க அங்கே கடந்து சென்றார்; அது ஒரு தேவையுள்ள ஆத்துமாவின் மீதான அவருடைய அன்பாக இருந்தது. அவரை விசுவாசிக்கும் தேவையுள்ள ஒரு ஆத்துமா வுக்காக இன்றிரவு அவர் மகிமையிலிருந்து இந்த பள்ளி கலையரங்கத்திற்கு வருவார். அப்படியே பின்பு, பாவம் உள்ளே வந்தபோது, அது மனிதனை ஐக்கியத்திலிருந்து பிரித்தது. மனிதனை மீண்டும் ஐக்கியத்திற்குக் கொண்டுவர தேவன் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அவர் உலகத்திற்கு ஒரு இரத்த மீட்பை அறிமுகப்படுத்தினார். தேவன் விலங்குகளைக் கொன்று அவற்றின் தோலை உடுத்தினார், ஒரு இரத்த மீட்பைக் காண்பித்தார். மேலும் அங்கே தேவன், தம்முடைய-தம்முடைய சிருஷ்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பின்பு, இரத்தம் சிந்துதலின் மூலம் திரும்பி வீட்டிற்கு வருவதற்கான வரவேற்புப் பாயை தேவன் விரித்தார். அது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் அப்படியே இருக்கும், தம்மோடு ஐக்கியம் கொள்வதற்காக தேவன் ஏற்பாடு செய்த ஆயத்தம் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாகவே இருக்கிறது. 37 நண்பரே, இன்னும் சில நிமிஷங்கள் என்னைக் கவனியுங்கள், ஏனென்றால் எனக்கு இன்னும் பன்னிரண்டு நிமிடங்கள் இருப்பதை நான் காண்கிறேன். பாருங்கள், நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், அவர்கள் அந்த இரத்தத்திற்குப் பதிலாகக் கல்வியை மாற்றாக வைக்கக் கடினமாக முயன்றிருக்கிறார்கள். அது ஒருபோதும் வேலை செய்யாது. அவர்கள் ஐக்கியத்தைக் கொண்டுவருவதற்கு மதப்பிரிவை மாற்றாக வைக்கக் கடினமாக முயன்றிருக்கிறார்கள். மக்களைப் படியுங்கள்... இன்று உலகம்... சகோதரர் டாமி ஹிக்ஸ், அந்த அற்புதமான சிறிய சகோதரர் இன்று இங்கே இருந்து இரும்புத் திரைக்குப் பின்னால் நடந்த தனது கதையை நமக்கு அளித்தது போல. அங்கே ரஷ்யா, அதனுடைய எல்லா கலாச்சாரத்திலும் அறிவியலிலும், கம்யூனிசத்தின் மூலம், அறிவியலின் மூலம், மற்றும் கலாச்சாரத்தின் மூலம் ஒரு ஐக்கியத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது, மற்றும் இயேசுவின் இரத்தத்தை மறுதலிக்கிறது, கிறிஸ்துவின் இரத்தமே நீங்கள் ஐக்கியம் கொண்டிருக்கக்கூடிய ஒரே வழியாக இருக்கும்போது. எதுவும் அதனுடைய இடத்தை எடுத்துக்கொள்ளாது. தேவனுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் கெட்டிக்காரராக இருக்க வேண்டியதில்லை; நீங்கள் புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை; நீங்கள் ஒரு தாழ்மையான கீழ்ப்படிந்த இருதயத்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும். அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் இரத்தத்தை அறிமுகப்படுத்தினார். 38 இப்போது, நீங்கள் இப்போது உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் சற்று முன்பு யோபுவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், யோபு இதே ஆயத்தத்தையே பயன்படுத்தினார். பைபிளின் மிகப் பழமையான புத்தகம், ஆதியாகமம் எழுதப்படுவதற்கு முன்பே, யோபு எழுதப்பட்டது. யோபு ஒரு நீதிமானாக இருந்தார், தேவனுக்குப் பயந்த ஒரு மனிதன். அவருக்குத் துன்பங்கள் வந்தன. ஆனால் துன்பங்கள் வருவதற்கு சற்று முன்பு, யோபு இந்தத் துன்பத்திற்காக ஆயத்தம் செய்தார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கவனியுங்கள், நண்பரே, பாவியான நண்பரே, இன்றிரவு உங்களுக்கு நேர் முன்னே துன்பம் இருக்கிறது. அதுதான் மரண இருளின் பள்ளத்தாக்குகள். அதன் வழியாக உங்களுடன் நடக்கக்கூடிய ஒரே நண்பருக்காக நீங்கள் ஆயத்தங்களைச் செய்வது நல்லது. சரி, அதற்காக ஆயத்தங்களைச் செய்யுங்கள். யோபுக்கு ஒரு கூட்டமாகக் குமாரத்திகளும் குமாரர்களும் இருந்தார்கள். அவர்கள் வெளியே சென்றார்கள் என்று அவர் அறிந்தபோது... பறவைகளைப் போல... இன்று மக்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இன்றைய தகப்பன்மார்களுக்காகவும் தாய்மார்களுக்காகவும் நான் பரிதாபப்படுகிறேன், நானே ஒரு பெற்றோராக இருப்பதால், மற்றும் ஒரு காரணத்தை அறிந்திருப்பதால்; நான் என் பிள்ளைகளை எங்கள் நகரத்தை விட்டு விலக்க முயற்சிக்கிறேன்; அங்கே எங்களுக்கு கிறிஸ்தவப் பள்ளிகள் எதுவும் இல்லை. மேலும் அவர்கள் பள்ளியில் வளர்க்கப்படும் ஒரு இடத்திற்கு அவர்களைக் கொண்டு செல்ல நான் விரும்புகிறேன், கர்த்தரை நேசிக்க அவர்கள் கற்றுக்கொள்ளும் ஒரு உண்மையான அடிப்படைப் பள்ளியில். வீட்டைச் சுற்றி நான் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய போதனை, ஆனாலும் அவர்கள் அந்த உலகப் பிரகாரமான கூட்டத்தோடு வெளியே செல்கிறார்கள்; பிசாசு ஒரு தந்திரமான ஆள், அவன் அதை அவர்களுக்குள் தள்ளுகிறான். அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவதற்கும் அது எதைப் பற்றியது என்பதை அறிவதற்கும் போதுமான வயது வரும்வரை நீங்கள் அவர்களை ஆவியானவரின் கீழ் வைத்திருந்தால், பின்பு தேவன் மற்றவைகளைக் கவனித்துக்கொள்வார். ஆனால் முதலில் அவர்களுக்கு அந்தச் சிறிய பருவமடையும் நாட்கள் இருக்கின்றன. 39 இப்போது, ஒவ்வொரு நபரும் தங்கள் பிள்ளைகளைப் பற்றி நினைக்கிறார்கள். அவர்கள் உங்கள்-உங்கள் செட்டைகளின் கீழ் இருக்கும்போது நீங்கள் அவர்களைக் கண்காணிக்க முடியும். ஆனால் செட்டைகளின் கீழிருந்து ஒருமுறை வெளியே வந்ததும், பின்பு அங்கே விசுவாசமற்ற, மோசமான, மற்றும் பிசாசுத்தனமான, மற்றும் மற்ற எல்லாமாய் இருக்கும் ஒவ்வொரு சிறிய பழைய ஆஸ்காரையும் உங்கள் பிள்ளைகளோடு சேரச் செய்வதற்குப் பிசாசு வைத்திருக்கிறான். தேவன் நமக்கு உதவி செய்வாராக. இங்கே நியூயார்க், சிகாகோ, மற்றும் இந்தப் பெரிய நகரங்களில் உள்ள இந்தச் சிறார் குற்றங்கள், செய்தித்தாள்கள் என்ன எழுதுகின்றனவோ, அவர்கள் எப்படி ஒருவரையொருவர் கொல்கிறார்கள் மற்றும் எல்லாமே... சிறு பிள்ளைகள், சிறு பையன்களும் சிறுமிகளும் கொல்வதும் கொலை செய்வதும், சுடுவதும், அதுபோன்று பலவும். அந்தப் பரிதாபமான சிறு குழந்தைகள் அது பிசாசு என்பதை மட்டும் உணர்ந்திருந்தால், நிச்சயமாக. 40 சிறார் குற்றங்களைக் கொண்டுவந்தது பெற்றோரின் குற்றமே, பெற்றோர் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளத் தவறியதே. சில வருடங்களுக்கு முன்பு, என் பையன் பிறந்தபோது உங்களுக்கு நினைவிருக்கும்; அது ஏறக்குறைய ஆகிவிட்டது, நான் நினைக்கிறேன் அவனுக்கு இப்போது பத்தொன்பது வயதிருக்கும். டாக்டர் என் மனைவியிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, "அந்தக் குழந்தை கத்திக் கொண்டிருக்கட்டும்" என்று சொன்னார். "அது அவனைக் காயப்படுத்தப் போவதில்லை. பாட்டி அவனைத் தூக்க வந்தால்," "அவளை-அவள் கைகளை அவன் மேலிருந்து விலக்கி வையுங்கள்" என்றார். "ஆறு மாத வயதில் அவன் தொட்டிலில் இருக்கப் பழகியிருக்க வேண்டும்" என்றார். இப்போது, அதைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு உண்மையான டாக்டருக்குப் பதிலாக ஒரு சூனிய டாக்டரின் பேச்சைப் போலத் தொனிக்கிறது. பின்பு அது எதைப் பொரித்து எடுத்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு கூட்டமான நரம்பு நோயாளிகளையும் ஒரு கூட்டமான குண்டர்களையும் பொரித்து எடுத்தது. கவனியுங்கள். நேசிப்பதற்காக தேவன் உங்களுக்கு அந்தக் குழந்தையைக் கொடுத்தார். நீங்கள் அதை எவ்வளவு மோசமாகக் கெடுத்தாலும் எனக்குக் கவலையில்லை; எப்படியும் அதை நேசியுங்கள். அது சரிதான். அதை நேசியுங்கள். நீங்கள் இப்போது அதை நேசிக்காவிட்டால், அது ஒரு அன்பற்ற வீட்டில் அக்கறையின்றி வளரும், அது எங்கேயோ அல்லது ஏதாவதிலோ அன்பைத் தேடும். அது எங்காச்சும் வெளியே செல்ல ஒரு வழியை உருவாக்கும். தாயே, அந்தக் குழந்தையை எடுத்து அதற்கு இப்போது ஐக்கியத்தையும் அன்பையும் கொடுங்கள். அதை உங்கள் ஒரு பகுதியாக ஆக்குங்கள், அது அப்படியே இருக்கிறது, அப்படியே நடந்துகொள்ளுங்கள், அதைக் கட்டியணைத்து, முத்தமிட்டு, மற்றும்-மற்றும் அதை நேசியுங்கள். உலகத்தின் காரியங்களில் மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்காதீர்கள். தேவன் அதை உங்களுக்கு ஒரு பொக்கிஷமாகக் கொடுத்தார்; அதைச் சரியாக வளருங்கள். ஆமென். கவனியுங்கள், அதுதான் காரியம்; நாம் தேவனின் காரியங்களை விட்டு விலகிவிட்டோம். நீங்கள் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறீர்கள், பின்பு நீங்கள் தேவனின் சித்தத்திற்கு வெளியே இருக்கிறீர்கள். 41 இப்போது, பின்பு நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், யோபு, தன் பிள்ளைகளைப் பற்றி நினைத்து, அவர் சொன்னார், "இப்போது, ஒருவேளை, அவர்கள் வெளியே செல்லும்போது, அவர்கள் பாவம் செய்யலாம்." எனவே அவர் அறிந்திருந்த ஒரே ஆயத்தமான சர்வாங்க தகனபலியான, இரத்தம் சிந்துதலைச் செலுத்தினார். அவர் தம் பிள்ளைகளுக்காக ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைச் சிந்தி, அவர்கள் பாவம் செய்திருந்தால், ஆயத்தம் செய்தார். நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? யோபு தம் பிள்ளைகளின் பாவத்திற்காக ஒரு ஆயத்தம் செய்யக் கருத்துள்ளவராக இருந்தார். மற்றும் தாயும் தகப்பனுமே, நம் பிள்ளைகள் டேப் டான்ஸ் மற்றும் அதுபோன்ற காரியங்களையும், ஏதோவொரு வகையான "ஒரு நடிகராக எப்படி ஆவது" என்பதைக் கற்றுக்கொள்வதற்குப் பணம் செலவழிப்பதை நாம் நிறுத்திவிட்டு, இயேசுவின் இரத்தத்தை அவர்கள் மேல் தெளிக்கக் கெஞ்சுவதற்கும், அவர்களுக்கு அன்பையும் ஐக்கியத்தையும் காட்டுவதற்கும் அதிக நேரத்தைச் செலவிட்டால், நாம் இன்னும் நன்றாகப் போய்க்கொண்டிருப்போம். பிள்ளையும் அவ்வாறே செய்யும். உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள். 42 ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளையை எடுத்து... முதலில், பெற்றோர் தேவனிடம் திரும்பி வந்து, ஐஸ்பாக்ஸிலிருந்து பீர்-ஐ எடுத்துவிட்டு, மேஜையிலிருந்து சீட்டுகளை எடுத்துவிட்டால் என்று நான் நம்புகிறேன். "ஓ," நீங்கள் சொல்கிறீர்கள், "அது குற்றமற்றது." அது எதைப் பொரித்து எடுக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். சகோதரனே, நான் ஒரு சீட்டைக் கூட என் தரையில் விழ விடமாட்டேன். இல்லை, ஐயா. அது பிசாசின் காரியம். அவர்களை அதிலிருந்து விலக்கி வையுங்கள். நீங்கள் சொல்கிறீர்கள், "நீங்கள் பழைய காலத்து ஆள், சகோதரர் பிரன்ஹாம்." நல்லது, அது ஒரு பழைய காலத்து சுவிசேஷமே என்னைக் காப்பாற்றியது. ஆமென். பழைய காலத்து இரட்சிப்புதான் என்னை மகிழ்ச்சியாக்குகிறது. அது பழைய காலத்து பரிசுத்த ஆவியானவர்தான் என்னைக் குணமாக்கினார். அதே காரியம்தான் நம்மை மகிமைக்கு வீட்டிற்குக் கொண்டு செல்லப்போகிறது, நிச்சயமாக. உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள். 43 இங்கே பாருங்கள். உலகம் என்ன செய்ய முடியும் என்று பாருங்கள். இப்போது, இது சிறிய சுத்தமான காரியங்கள் என்று நான் நினைக்கிறேன். எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் இங்கே பாருங்கள். டேவி குரோக்கெட் யார் என்பதை நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் உங்களுக்குச் சொல்ல முடியும். என், என். அது அவனுடைய தேக்கரண்டிகளில் இருக்கிறது, அவனுடைய தொப்பியில், அவனுடைய டையில், எங்கும், டேவிட் குரோக்கெட். உலகம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தது, அமெரிக்கா ஒரு மோகத்தினால் எல்லாப் பிள்ளைகளுக்கும் டேவிட் குரோக்கெட்டைப் பற்றிக் கற்றுக்கொடுத்தது. அவர் டென்னசியிலிருந்து வந்தவர், அவர் எப்போது பிறந்தார், மற்றும் அதைப் பற்றிய அனைத்தையும் அவர்களால் உங்களுக்குச் சொல்ல முடியும். அவர் ரக்கூன் தோலாலான தொப்பியை அணிந்திருந்தார், அவர் மூன்று வயதாக இருந்தபோது ஒரு கரடியைக் கொன்றார், மற்றும் இது போன்ற அனைத்துக் கற்பனையான காரியங்களும். அவர்களுக்கு டேவிட் குரோக்கெட்டைப் பற்றி எல்லாம் தெரியும். நீங்கள் அதை அவனுக்குச் சொல்ல விரும்புகிறீர்கள், சொல்லவும் உங்களுக்குப் பிடிக்கும். நல்லது, அவர்களால் டேவிட் குரோக்கெட்டைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், டேவிட் குரோக்கெட்டைப் போல உடுத்தவும், டேவிட் குரோக்கெட்டைப் போல நடக்கவும் முடிந்தால், நிச்சயமாக உங்களால் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கற்றுக்கொடுக்க முடியும், மற்றும் அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் போல நடப்பார்கள், மற்றும் டேவிட் குரோக்கெட்டை அவர்கள் நேசிக்க முடிவது போலவே இயேசு கிறிஸ்துவையும் நேசிப்பார்கள். பைபிளைச் சுற்றி ஐக்கியம் கொள்ளுங்கள். இயேசு அவர்களை நேசிக்கிறார் என்று அவர்களிடம் சொல்லுங்கள். 44 டேவிட் குரோக்கெட் உண்மைதான், ஆனால் இப்போது மூன்று வயதில் கரடியைக் கொன்றது, அதை நான் சந்தேகிக்கிறேன். அவற்றில் பல காரியங்கள், அநேகக் கற்பனைகளை நம்புகிறார்கள், அவற்றில் பல கதைகள் கற்பனையானவை. இங்கே நான் ஒரு சிறு பையனாக இருந்தபோது எனக்கு வில்லியம் டெல் மீது அத்தகைய அபிமானம் இருந்தது; அவர் தன் பையனின் தலை மீதிருந்த ஒரு ஆப்பிளைச் சுட்டார். நான் அங்கே சுவிட்சர்லாந்துக்குச் சென்றபோது, அதில் ஒரு வார்த்தை கூட உண்மையில்லை; அது முழுவதும் கற்பனை. அது சரிதான். வில்லியம் டெல் என்ற ஒருவர் இருந்தது உண்மைதான், ஆனால் அவர் தன் பையனின் தலையிலிருந்து எந்த ஆப்பிளையும் சுடவில்லை, இல்லை, இல்லை அதைப் பற்றி எதுவும் இல்லை. ஆனால் அது வெறும் கற்பனை மற்றும்-மற்றும் சொல்லப்பட்ட கதைகள். மக்களிடம் சத்தியத்தைக் கொண்டு செல்வோம். நாம் அதோடு ஐக்கியம் கொள்ள வேண்டாம்; தேவனோடு, மற்றும் பைபிளோடு, மற்றும் பரிசுத்த ஆவியானவரோடு ஐக்கியம் கொள்வோம். நம் பிள்ளைகளுக்காக ஆயத்தங்களைச் செய்வோம். 45 மேலும் கவனியுங்கள், முடிவாகப் பாடுகள் வந்தபோது, யோபு சோதனையின் வழியாகக் கடந்து சென்றார்... ஓ நான் அதை நேசிக்கிறேன். என்னை மன்னியுங்கள், நான் உணர்ச்சிவசப்படவில்லை, ஆனால் எனக்கு நன்றாக உணருகிறது. நான் அதை நேசிக்கிறேன். சோதனை, தேவன் தம் பிள்ளைகளைச் சோதிக்கிறார்... நீங்கள் அதை நேசிக்க வில்லையா? சோதனையிலுள்ள ஒவ்வொரு பாடும், நிரூபிக்கப்படும் தளம்; இது ஒரு சோதனைக் காலம், தேவன் தம் மக்களைச் சோதிக்கிறார், அவர்களை ஆயத்தப்படுத்துகிறார். நீங்கள் ஒரு ஜோடிக் குதிரைகளை வாங்குவதற்கு முன், நீங்கள் வெளியே சென்று அவற்றைச் சோதித்துப் பார்ப்பீர்கள், அவற்றைச் சரிபார்க்கிறீர்கள். அவை கொஞ்ச நேரம் இழுக்கட்டும்; அவற்றை ஓடவிட்டு, அவற்றின் மூச்சு உடைந்துள்ளதா, மூக்கில் எலுமிச்சைகளை வைத்துள்ளார்களா மற்றும் பலவற்றைச் சோதித்துப் பாருங்கள். ஓ, மூச்சு உடைந்த குதிரையின் மூக்கில் எலுமிச்சைகளை வைப்பது உங்களுக்குத் தெரியாதா? ஹ்ம். நீங்கள் செய்கிறீர்கள். சரி. உங்கள் மோட்டார் வாகனத்தைப் பொறுத்தவரை, அதைக் கா-ஆமணக்கு எண்ணெய்கள் மற்றும் சிறந்த எண்ணெய்களால் சரி செய்து, மோட்டாரில் உண்மையிலேயே அடர்த்தியாக்கி, அதை விற்கும்படியாக அதிலுள்ள சத்தத்தை எடுத்துவிடுகிறார்கள். புரிகிறதா? மற்ற இந்த எல்லாக் காரியங்களும், சோதனை. தேவன் தம் பிள்ளைகளைச் சோதனையின் வழியாக நடத்துகிறார். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் அவர் தம் அன்பை உங்களுக்குக் காட்ட முடியும். 46 இப்போது, சோதனை, யோபு தேவனுக்காக சோதனைக் களத்தில் நின்றார். அவர் பாவம் செய்யவில்லை; அவர் பாவம் செய்தார் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் அவர் செய்யவில்லை. தான் பாவம் செய்யவில்லை என்று அவர் எப்படி அறிந்திருந்தார்? சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக வர வேண்டிய ஒரே வழியில் தான் வந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அவர் ஒரு பலியைச் செலுத்தினார்; சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் அவர் தன் பாவங்களை அறிக்கை செய்தார். யார் என்ன சொன்னாலும் தேவனுடைய பார்வையில் தான் நீதிமானாக்கப்பட்டிருப்பதை அவர் அறிந்தி ருந்தார். தேவன் ஏற்பாடு செய்த பலியின் மீதான தன் விசுவாசத்தினால் தான் நீதிமானாக்கப்பட்டதால், தான் நீதிமான் என்று அவர் அறிந்திருந்தார். அவர் அதை விசுவாசித்தார். நல்லது. மேலும் சோதனைகள் வந்தபோது, அது உண்மை என்று நிரூபணமானது. அவருக்கு இருந்த எல்லாவற்றையும் தேவன் எடுத்துக்கொண்டார். அவருடைய பிள்ளைகளை எடுத்து, அவர்கள் எல்லோரையும் கொன்றார். அவருடைய மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் எல்லாவற்றையும் எடுத்து, அவை எல்லாவற்றையும் கொன்றார். எல்லாவற்றையும் செய்து, அவருடைய சொந்த சரீரத்தையும் உடைத்து, அவருடைய ஆரோக்கியத்தை எடுத்துக்கொண்டார். ஆனாலும் அவர் கர்த்தரை நேசித்தார். ஏனென்றால் அவர் தேவனுடைய வழியில் வந்திருந்தார், மேலும் தேவனோடு தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக நீங்கள் தேவனோடு தொடர்பு கொள்ளும்போது, அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இறையியலை எடுத்துக் கொள்ளவில்லை; இரத்தம் உங்களுக்கு எதைச் சாட்சியாகக் கூறுகிறதோ அதையே நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். 47 மேலும் கவனியுங்கள், அவர் இழந்த எல்லாவற்றையும் தேவன் அவருக்குத் திரும்பக் கொடுத்தார்; அது இரட்டிப்பானது. அவருடைய ஆடுகளை இரட்டிப்பாக்கினார்; ஒட்டகங்களை இரட்டிப்பாக்கினார். ஆனால் நீங்கள் கவனியுங்கள், அவருக்கு முன்பிருந்ததைப் போலவே சரியாக ஏழு பிள்ளைகளை மட்டுமே அவர் கொடுத்தார். அவர்கள் எந்தப் பிள்ளைகள்? அவர் இழந்த அதே பிள்ளைகள்தான் அவர்கள். அவர்கள் இரத்தத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் மகிமையில் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நம்முடைய பிள்ளைகளை நாம் அப்படித்தானே கொண்டிருக்க வேண்டும், இல்லையா. அது சரிதான். அவருடைய பிள்ளைகளை அவரிடம் திரும்பக் கொடுத்தார், நிச்சயமாக, இன்று இரவும் இனி என்றென்றைக்கும் அவர் அவர்களோடு இருக்கிறார். இஸ்ரவேலர்களிடம் ஆட்டுக்குட்டியின் சிந்தப்பட்ட இரத்தம் இருந்தது, அது ஒன்றே வழி. மேலும் இஸ்ரவேலர்கள் ஆராதிக்கக்கூடிய ஒரே இடம் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான். பலிகள் மற்றும் எல்லாம் ஒரு பொதுவான இடத்திற்குக் கொண்டுவரப்பட்டன, அங்கே வெண்கல பலிபீடத்தின் மேல் அவர்கள் உடல்களை எரித்து இரத்தத்தைத் தெளித்தார்கள். மேலும் தேவன் (கவனியுங்கள், இதோ இப்போது), தேவன் இஸ்ரவேலை சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மட்டுமே சந்தித்தார். தேவன் தம்முடைய ஜனங்களைச் சந்திக்கும் ஒரே இடம் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான், வேறு வழியில்லை. உங்கள் சபைப் பிரிவுகளில் அவர் உங்களைச் சந்திக்க மாட்டார். அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவர் சந்திக்க மாட்டார். உங்கள் கல்வியோடு, உங்கள் இறையியலோடு அவர் உங்களைச் சந்திக்க மாட்டார், அது எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் சரியே. அவர் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் மட்டுமே உங்களைச் சந்திப்பார். தேவன் இஸ்ரவேலைச் சந்தித்த ஒரே இடம் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான். ஆதாம் ஏவாளிடம் அவர் பேச முடிந்த ஒரே வழி, சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான். அவர் யோபிடம் பேச முடிந்த ஒரே வழி, சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ்தான். 48 மேலும் ஒரே வழி... கவனியுங்கள். இரத்தம் சிந்தப்பட்ட இடத்திற்கு மக்கள் வரவேண்டியதாயிருந்தது. புரிகிறதா? மேலும் தேவனோடு அந்தப் பூரணமான ஐக்கியத்தை நீங்கள் கொள்ளக்கூடிய ஒரே வழி, இரத்தம் சிந்தப்பட்ட இடத்திற்கு வருவதே. அது எங்கே இருக்கிறது? கிறிஸ்துவே தேவனுடைய சந்திப்பு இடம். நாம் ஒன்றுகூடி, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே ஒன்றாக உட்காருகிறோம். நாம் இரத்தத்தின் கீழ் இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் கட்டிடத்திற்குள் அசைவாடுகிறார். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் எப்படி வருகிறோம்? முதலாவதாக, அவருடைய சரீரத்திலிருந்து வந்த மூலக்கூறுகளின் வழியாகவே நாம் அவருடைய சரீரத்திற்குள் செல்கிறோம். அவருடைய சரீரத்திலிருந்து தண்ணீர், இரத்தம், ஆவி ஆகியவை வந்தன. ஆவியே உங்களை உள்ளே கொண்டுவருகிறது. சிவப்பான கிடாரி எரிக்கப்பட்டு தீட்டுக்கழிக்கும் ஜலமாக ஆக்கப்பட்டது போல, தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் சுத்திகரிப்பதையே இரத்தத்தின் ஆயத்தம் செய்கிறது. மேலும் ஆலயத்திற்கு வரும் ஒவ்வொரு விசுவாசியும் முதலில் பிரகாரங்களில் நின்றார்கள். ஒரு நிமிடம், தீட்டுக்கழிக்கும் ஜலம் அங்கே வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் பிரகாரங்களில் நின்றார்கள், மேலும் அவர்கள் மீது அது தெளிக்கப்பட்டது. அந்தத் தீட்டுக்கழிக்கும் ஜலம் என்பது வார்த்தையாகும். தேவனுடைய வார்த்தை, தீட்டுக்கழிக்கும் ஜலம், திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கிறது. நீங்கள் வந்து வார்த்தையைக் கேட்கிறீர்கள், அது செய்யும் முதல் காரியம், உங்கள் எண்ணங்களைத் தீமையிலிருந்து நன்மைக்கு மாற்றுவதற்காக அது உங்களைப் பிரிக்கிறது. 49 பிறகு பிரகாரங்களை விட்டு வெளியேறிய பின் அவர்கள் செய்த அடுத்த காரியம், அவர்கள் ஆலயத்தை நோக்கி வருகிறார்கள். வனாந்தரத்தில் இருந்த ஆலயத்தின் வாசலின் குறுக்கே, கிடாரி மரிக்கும்போது பிரதான ஆசாரியனின் விரலால் எடுக்கப்பட்ட ஏழு இரத்தக் கோடுகள் பூசப்பட்டிருந்தன; இந்த ஐக்கியத்திற்கு வரும் ஒவ்வொரு விசுவாசியும் முதலில் தனக்காக ஒரு மாற்றுப் பலி மரித்து தனக்கு முன்பாக ஒரு வழியை ஆயத்தம் செய்திருக்கிறது என்பதை உணர வேண்டும் என்பதை இது காட்டுகிறது. இந்த அற்புதமான ஐக்கியத்திற்குள் வரும் ஒவ்வொரு மனிதனும் முதலில் ("விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.")-பிறகு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, அதாவது ஐக்கியத்திற்குத் திரும்ப அழைக்கும் தேவனுடைய வரவேற்பு கம்பளத்தை அங்கீகரிக்க வேண்டும். மேலும் இரத்தம் உங்களுக்காகவே சிந்தப்பட்டது என்பதை அவன் அங்கீகரிக்க வேண்டும்; நீங்கள் ஐக்கியம் கொள்ளும்படியாகவே அவருடைய ஜீவன் இந்த பூமியிலே கொடுக்கப்பட்டது. 50 பின்பு, நீங்கள் இங்கே திரைக்குப் பின்னால் வரும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கிறார், தண்ணீர், இரத்தம், ஆவி. கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக உங்களுக்கு ஞானஸ்நானம் அளிக்கிறார்... பிறகு... இதோ இருக்கிறது, சகோதரனே, சகோதரியே, இப்போது கவனமாகக் கேளுங்கள்; நாம் முடிக்கப் போகிறோம். அப்போதுதான் நீங்கள் இனி அவர்களை 'ஹோலி-ரோலர்' என்று ஒருபோதும் அழைக்க மாட்டீர்கள். இல்லை. ஒருமுறை திரைக்குப் பின்னால் சென்றுவிட்டால், அதாவது, அவருடைய மாம்சத்திற்குள் சென்றுவிட்டால், பரிசுத்த ஆவியானவர் இரத்தத்தினால் உங்களைச் சுத்திகரித்து, உங்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவர அனுமதியுங்கள். அப்போது உங்களுக்கு ஐக்கியம் உண்டாகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வாசலிலேயே சகல பாவங்களற நம்மைச் சுத்திகரிக்கிறது, இப்போது நாம் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்கிறோம். இதை நினைத்துப் பாருங்கள். ஒரு பாப்டிஸ்ட்டாக இருக்கும் என்னோடு ஒரு மெத்தடிஸ்ட் சகோதரர் கைகுலுக்க முடியும். மேலும் ஒரு பெந்தெகொஸ்தே, ஒரு நசரேயன், ஒரு பில்கிரிம் ஹோலினஸ், பிரஸ்பிட்டீரியன் என நாம் யாராக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களற நம்மைச் சுத்திகரிக்கும்போது, நாம் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி, ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருக்கலாம். நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். என் நேரம் முடிந்துவிட்டது. அதற்காகவே நாம் இங்கே இருக்கிறோம். தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நாம் பிழைக்கும்படிக்கு அவர் தம்முடைய குமாரனைக் கொடுத்தார். குமாரன் தம்முடைய இரத்தத்தைச் சிந்த வேண்டியதாயிருந்தது. அவர் தம்முடைய சரீரத்தை உயிர்த்தெழுப்பினார்; அவருடைய சரீரமும் எலும்புகளும் இன்று இரவு தேவனுடைய சமுகத்தில் இருக்கின்றன. ஆனால் அவருடைய இரத்தம் இன்றும் பூமியைக் கறைபடுத்தியிருக்கிறது. 51 மேலும் அந்தச் சிந்தப்பட்ட இரத்தத்தின் வழியாக, வெளிவந்து... ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது, மேலும் அந்த ஜீவன்தான் திரும்பி வந்திருக்கிற பரிசுத்த ஆவியானவர். இயேசு சொன்னார், "சற்றுநேரத்திலே (கவனியுங்கள்.) உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு ஐக்கிய மாயிருப்பேன். நான் (தனிப்பட்ட பிரதிபெயர்) ஐக்கியமாயிருப்பேன்; நான் உங்களோடு இருப்பேன். இரண்டு பேராவது மூன்று பேராவது எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நான் இருப்பேன், உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு ஐக்கியமாயிருப்பேன்." கிறிஸ்தவ சகோதரனே, இன்று இரவு அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? என் பாவியான நண்பனே, நான் உன்னை நேசிக்கிறேன்; நீ ஒரு பாவியாக இருக்க எனக்கு விருப்பமில்லை என்பதை தேவன் அறிவார். நீ ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பவில்லை. ஆனால் இதற்கு முன்பு நீங்கள் ஒருபோதும் பெற்றிராத ஒரு உண்மையான ஐக்கியத்தை அனுபவிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? எந்த நேரத்திலும் இது ஒரு கோப்பை காபியையும் ஒரு சிகரெட்டையும் விட சிறந்ததாக இருக்கும். இது ஒரு விஸ்கி பானத்தை விட, அல்லது ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை கெடுக்கக்கூடிய ஒரு கேளிக்கையான இரவை விட, அல்லது வேறு எதை விடவும் சிறந்ததாக இருக்கும். இன்று இரவு நீங்கள் வரமாட்டீர்களா? "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்; எனக்கு ஐக்கியம் வேண்டும். என் வாழ்க்கையில் உண்மையான ஒன்றை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். 52 இயேசு உண்மையானவர். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். அவர் இங்கிருக்கிறார் என்பதையும் ஐக்கியத்தை விரும்புகிறார் என்பதையும் உங்களுக்கு நிரூபிக்க, அவர் அன்று செய்த அதே காரியங்களைச் செய்து, இன்னும் சில நிமிடங்களில் இங்கே மேடையில் இருப்பார். இனி நீங்கள் அவரை சந்தேகப்பட மாட்டீர்கள், இல்லையா? இன்றிரவு நாம் ஐக்கியம் கொள்வோம், நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்களா? இனி அவரை சந்தேகப்படாதீர்கள். "தேவனே, இதோ நீர் இருக்கிறீர், நான்-நான் இப்போது ஐக்கியம் கொள்கிறேன். இதுவே சரியான நேரம்; உம்முடைய வார்த்தையின்படியே நான் உம்மை ஏற்றுக் கொள்கிறேன். நீர் என்னோடு பேசுகிறீர், சகோதரர் பிரன்ஹாம் மூலமாக அல்ல, ஆனால் உம்முடைய பைபிளின் மூலமாகப் பேசுகிறீர். நீர் இங்கிருக்கிறீர் என்பதையும் எனக்கு உம்மோடு ஐக்கியம் உண்டு என்பதையும் ஒரு மனித சரீரத்தின் மூலம் அறிந்துகொள்ள, உம்முடைய ஈவு இந்த வழியாகப் பேசுகிறது. இன்று இரவு முழு இருதயத்தோடும் விசுவாசித்து இங்கிருந்து வெளியே செல்லப் போகிறேன்" என்று சொல்லுங்கள். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். பியானோ வாசிப்பவர், விரும்பினால், தயவுசெய்து- ஒரு நிமிடம் பியானோவிடம் வாருங்கள். 53 நாம் தலைகளை வணங்கியிருக்கும் போது, எல்லோரும் ஜெபிக்கும்போது, இன்றிரவு நான் வியக்கிறேன், பாவியான நண்பனே, இதுவரை நீங்கள் பெற்றிராத ஒன்றிற்காக நீங்கள் உண்மையிலேயே ஏங்கிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒரு சிலிர்ப்பிற்காக ஏங்குகிறீர்கள். உங்கள் காரை மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் ஓட்டுகிறீர்கள், உங்கள் டயர்களைக் கீச்சிடச் செய்கிறீர்கள். அம்மா, நீங்கள்-பையன்கள் உங்களைப் பார்த்து விசில் அடிக்க வேண்டும் என்பதற்காக எப்படி முடியுமோ அப்படி உடை உடுத்துகிறீர்கள், அதை நீங்கள் சிலிர்ப்பானதாக நினைக்கிறீர்களா? இன்றிரவு உங்களுக்கு நித்தியமான ஒரு சிலிர்ப்பு உண்மையிலேயே வேண்டுமா? இயேசுவிடம் வாருங்கள். உங்களை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தாத ஒருவர் உங்களை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அவரிடம் வாருங்கள். அதைச் செய்யமாட்டீர்களா? இந்த அற்புதமான ஐக்கியத்தை நீங்கள் ஒருபோதும் பெற்றிருந்த தில்லை. ஒரு உண்மையான நண்பனைக் கொண்டிருப்பது என்றால் என்னவென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாது. உங்களை ஏற்றுக்கொள்ள ஒருவர் இப்போது காத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். 54 மேலும் நாம் தலைகளை வணங்கியிருக்கையில், இது இங்கே என் கடைசி இரவு என்பதால், நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஜெபிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவியான நண்பனே, தேவனுக்கு நேராக உங்கள் கையை உயர்த்தி, "தேவனே, நான் உண்மையிலேயே உம்மோடு அந்த ஐக்கியத்தைக் கொண்டிருக்க விரும்புகிறேன்" என்று சொல்வீர்களா? நீங்கள் உங்கள் கையை உயர்த்துவீர்களா? கட்டிடத்தில் எங்கும், மாடியில், கீழே, அப்படியே... அது சரிதான். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அதுதான்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும். "எனக்கு ஐக்கியம் வேண்டும் தேவனே." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. நான் பார்க்கிறேன். "எனக்கு ஐக்கியம் வேண்டும், ஆண்டவரே. என் மதம் குளிர்ச்சியடைந்துவிட்டது; நான் சபைக்குச் சென்றேன்; அவ்வளவுதான் நான் செய்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கைக்குள் உம்மை அழைத்து உம்மோடு ஐக்கியம் கொள்வது என்றால் என்னவென்று எனக்கு உண்மையிலேயே தெரியாது. இதோ என் கை, தேவனே, இன்றிரவு என்னை ஏற்றுக்கொள்ளும்; எனக்கு ஐக்கியம் வேண்டும். நான் இப்போதே இரத்தத்தின் வழியாக வருகிறேன். நான் என் கையை உயர்த்துகிறேன், விசுவாசத்தினாலே நான் அதைப் பெற்றுக்கொள்கிறேன்." வேறு யாராவது உங்கள் கையை உயர்த்துவீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, மகனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும். அது சரிதான். ஆஹா, உங்களில் அநேகர். இங்கே கீழே தரை தளத்தில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களை, உங்களை, உங்களை. இங்கே என் இடதுபுறத்தில். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக அங்கே பின்னால், ஆம். என் வலதுபுறத்தில். 55 "ஆண்டவரே, இதோ என் கை. நான் இப்போதே விசுவாசத்தினால்... நான் இந்தக் கூட்டங்களுக்கு வந்திருக்கிறேன். நான் சுற்றியிருக்கிறேன். நான்-நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். நான் சந்தேகப்பட்டேன். நான் சபைக்குச் சென்றேன். நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழ முயற்சிக்கிறேன், ஆனால் தேவனே, உண்மையிலேயே, நான்-நான் உட்கார்ந்து உம்மோடு பேசுவதும், உம்மை நேசிப்பதும், மேலும் எழும்ப முடியாதபடிக்கு ஜெபிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதும் என்னவென்று எனக்கு ஒருபோதும் தெரிந்திருக்கவில்லை. நான் உம்மை நேசிக்கிறேன், நான் அங்கே நின்று அழுது என் கைகளை உமக்கு நேராக உயர்த்துவேன், என் இருதயம் சந்தோஷத்தால் துள்ளும். நான் அதை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை, ஆண்டவரே, நீர் இறங்கி வந்து என் ஜெபத்திற்குப் பதிலளிப்பதையும், எனக்காக ஏதோவொன்றைச் செய்வதையும், எல்லாம் இருளாக இருந்து எந்த வழியில் செல்வதென்று எனக்குத் தெரியாதிருக்கும்போது எனக்காக ஒரு வழியை ஏற்படுத்துவதையும், நீர் வந்து வழியைத் திறந்து என்னை முழுமையாக நிரப்புவதையும் நான் ஒருபோதும் கண்டதில்லை... ஆண்டவரே, நான் சபைக்குச் சென்றிருந்தாலும், அந்த ஐக்கியத்தை நான் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை, ஆனால் எனக்கு அது இப்போது வேண்டும், மேலும் நான் இரத்தத்தின் வழியாக வருகிறேன், சகோதரர் பிரன்ஹாம் பைபிளிலிருந்து பேசிய வழியில் வருகிறேன், நான் என் கையை உயர்த்துவேன்." 56 வேறு யாராவது, இப்போதே, தேவனுக்கு நேராக உங்கள் கையை உயர்த்துங்கள், "ஆண்டவரே, நான் இந்த வழியில் வருகிறேன்." தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஆம். கீழே குழியில், இன்று இரவு இங்கே கீழே யாராவது இருக்கிறீர்களா? "தேவனே, அந்த ஐக்கியத்திற்காக நான் வருகிறேன். என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உண்மையிலேயே நான் அதை விரும்புகிறேன்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி, உங்கள் கையை நான் காண்கிறேன். தேவன் அதைக் காண்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரியே, உங்களுக்கு ஐக்கியம் இருக்கிறது. அது நல்லது, சரி, இப்போது ஜெபத்தின் ஒரு சிறிய வார்த்தை. ஆராதனை முடிந்த பிறகு, அவர்கள் பலிபீட அழைப்பு கொடுப்பார்கள், நீங்கள் பலிபீடத்தைச் சுற்றி வந்து சிறிது நேரம் ஜெபிக்க விரும்பினால், அது நல்லதாயிருக்கும். பரம பிதாவே, வருகிற இவர்கள், நாம் வாழ்கிற இந்தக் கொடூரமான, இருண்ட, பொல்லாத நாளிலே ஏதோவொன்று அவர்கள் இருதயத்தைத் தட்டினாலன்றி, நிச்சயமாக ஆண்டவரே, யாருமே தங்கள் கையை உயர்த்த மாட்டார்கள். ஆண்களும் பெண்களும் உம்மை விட்டு எப்படி விலகிப் போய்விட்டார்கள். கலாச்சாரத்தின் மூலமாகவும் அறிவியலின் மூலமாகவும் இந்த உலகம் தேவனுடைய பிரிவிலிருந்து எப்படி முற்றிலும் விலகிச் சென்றுவிட்டது. மேலும் இன்று நாம் நகரத்தைப் பார்க்கிறோம், அங்கே பார்த்து கட்டிடங்கள் இடியத் தொடங்குவதைக் காண்கிறோம், தெருக்கள் உடைவதைக் காண்கிறோம், பல வருடங்களுக்கு முன்பு அவை-அவை நல்ல தெருக்களாக, நல்ல கட்டிடங்களாக இருந்தன என்பதை அது காட்டுகிறது. ஆனால் அவை இப்போது பழையதாகிவிட்டன. முழு பழைய உலகமும் அப்படியே அமர்ந்து, நியாயத்தீர்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. 57 தேவனே, நீர் மிக விரைவில் வர வேண்டும், அப்போது எல்லாம் முடிந்துவிடும். தங்கள் வாழ்க்கையைப் பாவத்தில் வாழ்ந்து, கவலையான முகத்தோற்றத்துடன் ஒரு மூலையில் உட்கார்ந்து, மரணத்திற்காகக் காத்திருந்து, தங்கள் பற்களைக் கடித்துக் கொண்டு, தங்களால் முடிந்தால் எந்தவொரு தீமையையும் செய்யக்கூடிய ஏதோவொரு ஆணையோ பெண்ணையோ போல, தங்கள் நியாயத்தீர்ப்புக்காகவும், தங்கள் நித்திய சேருமிடம் தங்கள் மீது அறிவிக்கப் படுவதற்காகவும் காத்துக்கொண்டிருக்கிற ஒரு நிர்ப்பந்தமான மனிதனைப் போல... இது எப்படி வித்தியாசமாக இருந்திருக்க முடியும். அவர்கள் வயதானவர்களாக இருந்தாலும், இன்னும் நேர்த்தியாகவும், அன்பாகவும் இருக்க முடியும், ஒரு முதிர்வயதான தாயார், தன் வாழ்க்கையை தேவனுக்காகத் தூய்மையிலும் பெண்மையிலும் சேவை செய்து, தன் பலனுக்காகக் காத்துக்கொண்டிருப்பதைப் போல. தேவனே, கிருபையாயிரும். தயவுசெய்து, அன்பான தேவனே, இந்த மக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் கையை விட்டு எடுக்கிறார்கள்; நான் வாழ்வதற்கு அவர்கள் உதவுகிறார்கள். என் பிள்ளைகளின் உணவிற்கு அவர்கள் பணம் செலுத்துகிறார்கள். அவர்கள்... தேவனே, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; என் இதயம் துடிக்கிறது. அவர்கள் என்னைக் கேட்க முடியும் என்பதற்காக அல்ல, ஆனால் ஆண்டவரே நீர், அவர்கள் ஒவ்வொருவரையும் மன்னித்து இன்றிரவு அவர்களை ஒரு பூரணமான ஐக்கியத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தேவனே, எனக்காக அதைச் செய்வீர்கள் அல்லவா? நான் உம்மை நேசிக்கிறேன், நான் எதைக் கேட்டாலும் நீர் அதைச் செய்வீர் என்று நீர் சொன்னீர். பின்பு இன்றிரவு வியாதிப்பட்ட அனைவரையும் குணமாக்குவீர்கள் அல்லவா, பிதாவே? நீர் இப்போது இங்கே மேடையில் இருக்கிறீர். நீர் இந்தக் காரியங்களைச் செய்வீர் என்று எனக்குத் தெரியும். மேலும் இன்றிரவு அந்த மக்களின் கண்களைத் திறந்தருளும். உமது மகா வல்லமையில் நீர் கிரியை செய்வதை அநேகர் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை அவருடைய சிறந்த ஐக்கியத்தில் காணட்டும். 58 பைபிளில், முதல் உயிர்த்தெழுதலின் காலையிலே, கிலெயோப்பா மற்றும் அவனுடைய நண்பன் ஆகிய இரண்டு மனிதர்கள் எம்மாவுவுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இயேசு நாள் முழுவதும் அவர்களோடு நடந்தார். அன்று இரவு அவர் அவர்களோடு உள்ளே சென்றபோது, சாதாரண மனிதர்கள் செய்வதிலிருந்து சற்று வித்தியாசமாக அவர் ஒன்றைச் செய்தார். இயேசுவைத் தவிர வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள், மேலும் அவர் செய்த அந்த அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். ஆண்டவரே, இன்றிரவு இங்கே சிகாகோவிலும் அப்படியே ஆகக்கடவது. இந்த நகரத்தில் உள்ள சிறந்த பெரிய சபைகளிலிருந்து அநேகர் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அங்கே உறுப்பினர்களாக இருக்கலாம், ஆனால் ஒருபோதும் மறுபடியும் பிறந்திருக்க மாட்டார்கள். ஆண்டவரே, அவர்களுடைய இருதயங்களை உம்மண்டை நெருக்கமாகக் கொண்டுவர, இன்றிரவு சற்று வித்தியாசமாக ஏதேனும் ஒன்றைச் செய்யும், இதை நாங்கள் அவருடைய நாமத்தினாலே கேட்கிறோம். ஆமென். சகோதரி, நாம் ஜெப அட்டைகளைப் பெறும்போது, "என் விசுவாசம் உம்மை நோக்குகிறது" என்ற பாடல் உங்களுக்குத் தெரியுமா என்று நான் யோசிக்கிறேன். அதற்கான ஒரு இசைக் குறிப்பை நீங்கள் வாசிப்பீர்களா? "என் விசுவாசம் உம்மை நோக்குகிறது" எத்தனை பேருக்குத் தெரியும்? எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஒரு வினாடி நாம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும்போது. நாம் ஜெப அட்டைகளை அழைப்போம். பில்லி, நீ எங்கே இருக்கிறாய்? 59 ஜெப அட்டை...? ...இப்போது எத்தனை கொடுத்தாய்? எத்தனை? நூறா? சரி. நாம் எண் 1-ல் ஆரம்பித்து சுமார்... வரை செல்வோம், [பில்லி பேசுகிறார், "நான் இரண்டு வெவ்வேறு குழுக்களில் கொடுத்தேன்"] (ஆம். M மற்றும் N-கள். நேற்றிரவு எதை கொடுத்தாய். M. சரி.) சரி. போதனையைக் கேட்கவும், ஜெப அட்டை...பெறவும் இன்று நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் அல்லவா?... எண் 1-லிருந்து ஆரம்பியுங்கள், அது யாரிடம் இருக்கிறது? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. என் விசுவாசம் உம்மை நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; இப்போது, நான் ஜெபிக்கும்போது எனக்குச் செவிசாயும், என் குற்றங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிடும், ஓ, இந்த நாள் முதற்கொண்டு என்னை, முற்றிலும் உம்முடையவராக இருக்கச் செய்யும்! சகோதரர் வுட், ஜெப வரிசையில் பில்லிக்கு உதவ வருவீர்களா? சரி, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. உமது அபரிமிதமான கிருபை அளிக்கட்டும், சோர்ந்துபோகும் என் இருதயத்திற்குப் பெலனை, என் வைராக்கியத்தைத் தூண்டிவிடட்டும்; நீர் எனக்காக மரித்தபடியால், ஓ உம் மீதான என் அன்பு, ஓ தூய்மையாக, அனலாக, மற்றும் மாறாததாக இருக்கட்டும், ஒரு ஜீவனுள்ள அக்கினியாக! இது அருமையானது அல்லவா? நாம் இதை மிக மெதுவாகப் பாடுவோம். என் விசுவாசம் உம்மை நோக்குகிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; நீர் எனக்காக மரித்தபடியால், ஓ உம் மீதான என் அன்பு, (கவனியுங்கள்.) தூய்மையாக, அனலாக, மற்றும் மாறாததாக இருக்கட்டும், ஒரு ஜீவனுள்ள அக்கினியாக! 60 நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? இது உங்கள் இருதயத்தில் இருக்க வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? தூய்மையாக, உங்கள் அன்பு தூய்மையாக, அனலாக மற்றும் மாறாததாக இருக்கட்டும், ஒரு ஜீவனுள்ள அக்கினியாக. நம்முடைய பிதாக்களின் விசுவாசம் இன்னும் ஜீவிக்கிறது, எவ்வளவு ஆச்சரியமானது. நண்பர்களே, எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், அன்பு காரியங்களை மாற்றுகிறது, வெறும் அன்புதான். அது கிரியை செய்யும். இப்போது, நீங்கள் வரும்போது அவரை நேசியுங்கள். இப்போது, அவர் அசையத் தொடங்கும் போது அவரை விமர்சிக்காதீர்கள்; அவரை நேசியுங்கள்; அவரைத் தழுவிக்கொள்ளுங்கள், "ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்று சொல்லுங்கள். இப்போது, கடைசி முறையாக, நான் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வரிசையை முடிக்கிறேன். அபிஷேகம் தொடங்கியவுடன் நான் மக்களுக்காக விரைவாக ஜெபிக்கத் தொடங்குவேன். இயேசு உங்களைக் குணமாக்குவார் என்று ஒவ்வொருவரும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நினைவில் கொள்ளுங்கள், அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். அவர், "பிதாவானவர் செய்யக் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, நான் தாமாய் ஒன்றும் செய்யமாட்டேன். பிதா எனக்குக் காண்பிக்கிறதை, நான் செய்கிறேன்" என்று அவர் சொன்னார். 61 அந்த ஸ்திரீயுடனே பேசியபோது, அவர் அவளுடைய பாவங்களை அவளுக்குச் சொன்னார். நாத்தான்வேலுடனே பேசியபோது, அவன் எங்கே இருந்தான் என்று அவனுக்குச் சொன்னார். பேதுருவுடனே பேசியபோது, முதலில் அவனுக்கு-அவனுடைய பெயர் என்னவென்றும், அவனுடைய தகப்பன் யார் என்றும் சொன்னார். மேலும் வேதாகமத்தில் மற்ற அநேக நேரங்களிலும்... நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும்படிக்கு, இயேசு தாமே இப்போது, "பிதாவானவர் எனக்கு முதலில் காண்பித்தால் ஒழிய, நான் ஒன்றும் செய்கிறதில்லை" என்றார். அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார்; பிதாவானவர் எப்படிக் காண்பிப்பாரோ, அப்படியே அவர் இன்றிரவும் அதே காரியத்தைச் செய்கிறார். இப்போது, நான் ஒரு மனுஷன், அவ்விதமாகவே அவரும் ஒரு மனுஷனாக இருந்தார். அவர் தேவனுடைய குமாரன், ஜெநிப்பிக்கப்பட்டவர், கன்னிகையினிடத்தில் பிறந்தவர். நான் கிருபையினாலே இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. அவருடைய கிருபை என்னை இரட்சித்தது. எனவே, தெரிந்துகொள்ளுதலின் மூலம் அவர் அதற்கூடாக ஒரு வழியைத் திறந்தார். முன்னறிவின்படி, அவர் உங்களுக்குக் கிரியை நடப்பிக்கும்படிக்கு, தமக்கு ஒரு இடத்தைக் கொடுப்பதற்காக அவர் என் இருதயத்தில் ஒரு வழியைத் திறந்தார். உங்களுடைய விசுவாசமே அதைச் செய்கிறது, என்னுடையது அல்ல; என்னால் அதைச் செய்ய முடியாது. நீங்கள், "சகோதரர் பிரான்ஹாம், எழுந்து நில்லுங்கள்-எழுந்து நில்லுங்கள்-எழுந்து நில்லுங்கள், எனக்கு என்ன வியாதி என்று சொல்லுங்கள்" என்று சொல்லலாம். என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது. அதைச் செய்ய உங்களுடைய விசுவாசம் தேவை. புரிகிறதா? அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுவிட்டுப் போன ஸ்திரீயைப் பார்த்து, "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். நாம் இன்னும் ஒருமுறை அவரிடம் பேசுவோம். 62 பரம பிதாவே, இன்றிரவு தெய்வீகமான, அன்பான, கிறிஸ்தவ அன்போடு, இயேசுவின் நாமத்தில் உம்மை அணுகுகிறோம். இப்போது, ஆண்டவரே, நாங்கள் மணிக்கணக்காக இங்கே நிற்க வேண்டியதில்லை. ஆண்டவரே, நீர் எங்களோடு கொஞ்சம் பேசினால் மட்டும் போதும், நீர் உம்மை இங்கே வெளிப்படுத்தினால் மட்டும் போதும், அதன்பின் நாங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். பின்பு நாங்கள் விசுவாசிப்போம், பிதாவோடு உண்மையிலேயே உண்மையான அன்பான ஐக்கியத்தோடே இன்றிரவு நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுப் போகப்போகிறோம். இயேசுவின் நாமத்தில் புறப்பட்டுப் போகிறோம். இதை அருளுவீராக, ஆண்டவரே. உம்முடைய மகிமைக்காக என்னை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், இயேசு கிறிஸ்துவின் கிரியைகளைப் பரிசுத்த ஆவியானவர் இந்த ஏழ்மையான பாத்திரமற்ற சரீரத்தின் மூலமாகச் செய்யும்படிக்கு, பரிசுத்த ஆவியானவருக்கு என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென். நல்லது. எப்படி இருக்கிறீர்கள், சகோதரியே? சரி, இப்போது, சபையாரே, நான் விரும்புகிறேன்... நீங்கள் செய்வீர்களானால், நான் உங்களிடம் ஒரு உண்மையான உதவியைக் கேட்கப்போகிறேன். மக்கள் தங்கள் பேருந்துகளையும் இரயில்களையும் பிடிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் கொஞ்ச நேரம் மட்டுமே இங்கே இருப்போம்; அவசியமில்லை. என்னுடைய ஊழியத்தில், நான் இன்னும் பலன்களைக் காணவில்லை என்று காண்கிறேன்; நான் அதை மாற்றிவிட்டு, வியாதியஸ்தர் களுக்காக ஜெபிக்கும் முறைக்கே திரும்பச் செல்ல முயற்சிக்கிறேன். சகோதரர் ஜோசப் அநேகமாக எனக்கு எழுதிச் சொல்வார். ஆனால் என் ஊழியம் இதுதான்: தேவன் இங்கே இருக்கிறார் என்பதை மட்டுமே அது அறிவிக்கிறது. இப்போது இந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேனா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல, அது உங்கள் விசுவாசம். அது என்னைத் தொடுவதல்ல; அது அவரைத் தொடுவது. புரிகிறதா? நீங்கள் அவரைத் தொடுங்கள்; அது நடக்கும். 63 இப்போது அங்குள்ளவர்களில் எத்தனை பேர்... இங்கே உள்ள சபையாரே, சுற்றியுள்ள மக்களே, இங்கே உங்களுக்காக ஜெபிக்கப்பட வேண்டும் என்றும்-மேலும்-மேலும் தேவன் உங்களைக் குணமாக்க வேண்டும் என்றும் எத்தனை பேர் விரும்புகிறீர்கள், மேலும்-மேலும்-மேலும் நீங்கள்-நீங்கள் வியாதியாயி ருக்கிறீர்கள், தேவன் உங்களைக் குணமாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள், உங்களிடம் ஜெப அட்டைகளோ மற்றவைகளோ இல்லை, தேவன் உங்களைக் குணமாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? பாருங்கள், இப்போது அவரை விசுவாசியுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். பின்பு அவர் அதை ஒருமுறை செய்தால்... மோசேக்கு, தான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் சொன்னபோது, அவன் அங்கே சென்று, இஸ்ரவேலுக்கு முன்பாக அந்த அடையாளத்தைச் செய்தான், அவர்கள் ஒவ்வொருவரும் விசுவாசித்துப் புறப்பட்டுப் போனார்கள். அது சரியா? இப்போது, நாமும் விசுவாசிக்க வேண்டும். அது எப்போதும், எப்போதும், எப்போதும், எப்போதும், எப்போதும், முடிவற்றதாக இருக்கக் கூடாது. அது ஒருமுறை மட்டுமே இருக்க வேண்டும், நீங்கள், "அவ்வளவுதான்" என்று சொல்ல வேண்டும். மேலும், நாம் இருக்கிற இந்த அன்பான கிறிஸ்தவ ஆவியிலே நாம் ஒன்றுகூடி, ஒருவர்மீது ஒருவர் கைகளை வைத்து, ஜெபித்து, நம் நாற்காலியை விட்டு எழுந்து, "நன்றி, அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, நீர் உமது வார்த்தையைக் காக்கிற சர்வவல்லமையுள்ள தேவன் என்கிற நிச்சயத்தோடு நான் இப்போது அன்பு நிறைந்த இருதயத்தோடு செல்கிறேன்" என்று சொல்ல வேண்டும். அது அதைத் தீர்த்துவிட வேண்டும். புரிகிறதா? 64 இப்போது, நான் எடுத்துக்கொண்டு, ஒருவேளை நள்ளிரவு வரை இங்கே நிற்கலாம்; அநேகமாக நூறு பேரை நான் இங்கிருந்து கடந்துபோகச் செய்யலாம், ஆனால்-என்னால் அவ்வளவு காலம் வாழ முடிந்தால். அவர்கள் என்னை இருக்க விடமாட்டார்கள், ஏனென்றால் அதிலிருந்து வெளிவர எனக்கு ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரங்களோ ஆகும். புரிகிறதா? இப்போது, நான் அதிலிருந்து வெளியேறியிருக்கும்போதோ அல்லது அதற்குள் இருக்கும்போதோ அல்ல; அது அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் (புரிகிறதா?), நீங்கள் அதிலிருந்து வெளிவரும்போதுதான். இது அபிஷேகம், அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல், அபிஷேகிக்கப்படுவதன் அர்த்தம் என்னவென்று அறியாமல் இருந்தால், அது மற்றொரு பரிமாணம். அது மற்றொரு பரிமாணம் அல்லது மற்றொரு உணர்வு. அதனால் நான்... மக்களிடம் பேசும்போது, இங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறார் என்பதை உணர்கிறேன். இப்போது, அவளைப் பற்றி ஏதாவது சொல்லப்பட்டால், என்னைத் தவிர வேறு யாராவது அதைச் சொல்ல வேண்டும், ஏனென்றால் எனக்கு அந்த ஸ்திரீயைத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களா? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். அவள் இங்கே நிற்கிறாள், அது மட்டும்தான் எனக்குத் தெரியும். அவள் இங்கே நிற்கிறாள். 65 இப்போது... மேலும் அவள் என்னை விட மிகவும் இளையவள், எனவே, நான் பிறந்த பின்பு அவள் பிறந்தாள், மேலும் நாம்-நாம் இல்லை-இதற்கு முன்பு ஒருவரை யொருவர் பார்த்ததில்லை. இப்போது, ஏதாவது நடக்க வேண்டும் என்றால்... இப்போது, அது சுகமளிப்பதானால், அவள் சுகத்தை விரும்பினால், நான்-நான் அதைச் செய்ய விரும்புவேன், ஆனால் என்னால் முடியாது. நான் செய்யக்கூடிய ஒரே காரியம் ஒருவேளை, வார்த்தையைப் பிரசங்கிப்பது அல்லது தீர்க்கதரிசனம் போன்ற மற்றொரு வரம் போன்ற தெய்வீக வரத்தின் மூலம், அவளுடைய விசுவாசத்தை வளர்ப்பதுதான். தேவன் இந்த ஜெப வரிசையில் கொஞ்ச நேரம் இதைச் செய்வாரானால், இயேசு இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்றும், பின்பு நீங்கள் அவரோடு ஐக்கியம் கொள்வீர்கள் என்றும் இன்றிரவு நீங்கள் அனைவரும் எனக்கு உறுதியளிப்பீர்களா, நீங்கள் அதைச் செய்வீர்களா? இப்போது அங்கே ஜெபத்தில் இருங்கள். இப்போது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக ஒவ்வொரு ஆவியையும் நான் என் கட்டுப்பாட்டில் எடுக்கிறேன். மேலும் தயவுசெய்து அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு அனைவரும் அமர்ந்திருங்கள். எழுந்து நடமாட வேண்டாம்; அமைதியாக அமர்ந்திருங்கள். 66 இப்போது, சகோதரியே, இன்றிரவு இங்குள்ள முதல் நபராகிய நான் உங்களிடம் பேச விரும்புகிறேன், நான்-உங்களிடம் பேச விரும்புகிறேன், ஏனென்றால் அபிஷேகத்தைத் தொடங்குவதற்கு இதுதான் முதல் படி. உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது; இப்போது எங்களுக்குத் தெரிந்த எதுவும் இல்லை. புரிகிறதா? பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்வார் என்று பார்க்க நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என்பதையோ, அல்லது நீங்கள்- நீங்கள்-நான் ஒன்றும் அறியாத ஒரு காரியத்தை நீங்கள் அறிவீர்கள் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களா, மாட்டீர்களா? இப்போது, சகோதரியே, நான் ஒரு மனுஷனாக மட்டுமே இருக்க முடியும். புரிகிறதா? என்னால் அவ்வளவுதான் முடியும்; நான் அவ்வளவுதான், கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை நான் உணருகிறேன்? ஏனென்றால் உங்களுடைய ஆவி என்னைச் சந்திக்கும்போது அதற்கு ஒரு அற்புதமான உணர்வு இருக்கிறது. புரிகிறதா? இப்போது, அப்படி இல்லையென்றால், அது பின்வாங்கியிருக்கும். பாருங்கள், நீங்கள் எப்போதாவது ஒரு கூட்டத்தில் இருந்திருந்தால், பாவிகள் வரும்போது, உடனடியாக, அது வரவேற்கப்படுவதில்லை. விமர்சகர்கள், அதை நீங்கள் அப்போதே அறிவீர்கள். புரிகிறதா? ஏனென்றால் அது ஆவிக்குரியது. புரிகிறதா? ஆனால் இது இயற்கைக்கு அப்பாற்பட்டது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர்; நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் நிச்சயமாக விசுவாசிக்கிறீர்கள். அது சரிதான். ஆனால் இப்போது அடுத்த காரியம் என்னவென்றால், நீங்கள் ஒரு விமர்சகராக இருந்திருக்கலாம், நான் அதை அறிந்திருக்க மாட்டேன் (புரிகிறதா?), இயற்கையாக, ஆனால் நான் இப்போது அதை அறிகிறேன் (புரிகிறதா?), ஏனென்றால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இங்கே இருக்கிறது. 67 இப்போது, உங்களுக்காக ஜெபிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புவதால் இங்கே இருக்கிறீர்கள். நான் உங்களைப் பார்க்கிறேன்; நீங்கள்-நீங்கள் மிகவும் பதட்டமான நபர், மிகவும் கலக்கமடைந்துள்ளீர்கள். மேலும் நீங்கள் எப்போதும் உங்களுடைய... உங்களுக்கு எப்போதும் ஒரு தலைவலி இருப்பதை நான் பார்க்கிறேன். எல்லா நேரமும் ஒரு தலைவலியால் நீங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யப்படுகிறீர்கள். இப்போது, அது உண்மைதான், இல்லையா? அது உண்மை. இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்க வேண்டும். அனைவரும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்கிறீர்களா? நல்லது. இப்போது, பாருங்கள், நான் அந்த ஸ்திரீயோடு அதிகமாகப் பேசினால், இன்னும் அதிகமாகச் சொல்லப்படும். நான் ஒரு நபரை எடுத்துக்கொண்டு, அவர்களுடன் நீண்ட நேரம் பேசலாம், அநேகரை இதற்கூடாகக் கொண்டுவராமல் இருக்கலாம், ஆனால் அவர்களை விரைவாக வரச் செய்து அவர்கள் அனைவரையும் இதற்கூடாகக் கொண்டுவர முடியும். அது எதைப்பொறுத்து... எனக்கு அவ்வளவு பலம் இருக்கிறது; அது வெளியேறும், ஏற்பாடு. அது முடிந்தவுடன்... தங்கள் இடங்களில் இங்கே நிற்கும் இந்த மனிதர்களைப் பார்க்கிறீர்களா? அவர்கள் என்னை அழைத்துச் செல்வார்கள். நான் எப்போது (சுயநினைவில்) இருக்கிறேன், எப்போது இல்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசியுங்கள். 68 நீங்களும் நானும் பேசுவோம். நீங்கள் அங்கே நிற்பதால், நீங்கள் மிகவும் நல்ல நபர் போல் தெரிகிறீர்கள். உங்கள் பிரச்சினை என்ன அல்லது ஏதோவொன்றை அவர் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இப்போது, நீங்கள் இந்த வழியைப் பாருங்கள், ஒரு நிமிடம். மேலும் உங்களிடம்-உங்களிடம் பேசுவது மிகவும் எளிது, ஏனென்றால் உங்களுக்கு உண்மையான, உண்மையான விசுவாசம் இருப்பதாக நான் நம்புகிறேன். அது சரிதான். நீங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதை நான் பார்க்கிறேன்; நீங்கள் தண்ணீரின் அருகேயுள்ள ஒரு நகரத்தைச் சேர்ந்தவர். ஆனால் அது இந்த தண்ணீர் அல்ல; அது உப்பு தண்ணீர். அது வெகு தொலைவில் உள்ளது; நீங்கள் வடகிழக்கிலிருந்து மேற்காக சிகாகோவிற்கு வருகிறீர்கள், நீங்கள்-நீங்கள் ஒரு நகரத்தில் இருக்கிறீர்கள், நான் ஒரு பெயரைக் காண்கிறேன், அது போர்ட்லேண்ட். மேலும் மேய்ன் என்பது-என்பது-அந்த மாநிலம், போர்ட்லேண்ட், மேய்ன். மேலும் அங்கே நீங்கள் அக்கறை கொண்டுள்ள ஒருவர் உங்களுக்கு இருப்பதை நான் பார்க்கிறேன்; அது ஒரு பாதிக்கப்பட்ட நபர். தசைநார், எலும்பு வியாதி போன்ற ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள, அது ஒரு உறவினர், ஒரு மருமகன். மேலும் உங்களுக்கு ஒரு சகோதரனும் இருக்கிறார். மேலும் உங்கள் கையில் இரண்டு கைக்குட்டைகள் உள்ளன; நீங்கள் அவற்றை எடுத்தபோது நான் உங்களைப் பார்த்தேன். மேலும் நீங்கள்-மேலும் நீங்கள், ஒன்று நரம்பு வியாதியால் அவதிப்படும் ஒரு சகோதரனுக்காக, மற்றொன்று அவதிப்படும் ஒரு மருமகனுக்காக. அது உண்மை, இல்லையா. நல்லது. இப்போது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நல்லது, என்னை விடுங்கள்... 69 பரம பிதாவே, கிணற்றருகே அமர்ந்து அந்த ஸ்திரீயிடம், "போய், உன் புருஷனை அழைத்துவா" என்று சொன்ன உம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். "எனக்கு ஒருவரும் இல்லை" என்று அவள் சொன்னாள். நீர் சொன்னீர், "அது சரிதான். உனக்கு ஐந்து பேர் இருந்தார்கள்." அவள் சொன்னாள், "ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் இவைகளை நமக்கு அறிவிப்பார் என்று அறிவேன்." இயேசு, "நானே அவர்" என்றார். பிதாவே, இன்றிரவு நீர் இந்த ஐக்கியத்தை எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்தீர், இதோ நாங்கள் இந்த ஐக்கியத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். "நான் செய்யும் காரியங்களை நீங்களும் செய்வீர்கள். உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடிருந்து, ஐக்கியமா யிருப்பேன்." ஓ, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், இயேசுவே, நீர் இங்கே இருக்கிறீர், இயேசுவின் நாமத்தில் இந்தக் கைக்குட்டைகளுடன் நான் இந்த ஸ்திரீயை ஆசீர்வதிக்கும்போது, இவளுடைய வேண்டுதல்களை அருளுவீராக. ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரியே, உங்கள் இருதயத்தின் விருப்பத்தை உங்களுக்குத் தருவாராக. 70 எப்படி இருக்கிறீர்கள், சகோதரியே? நாமும் ஒருவருக்கொருவர் அறிமுகமில் லாதவர்கள் என்று வைத்துக்கொள்வோமா? நாம் அப்படித்தான். இயேசு நம் இருவரையும் அறிவார். முதுகுப் பிரச்சனை இருக்கிறது, அங்கே அமர்ந்திருக்கும் சிறிய அம்மையாரே, இல்லையா. அது சரிதான். முதுகு மற்றும் பற்கள், உங்கள் பற்களிலும் ஏதோ பிரச்சனை இருக்கிறது. இயேசு உங்களைக் குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம் (புரிகிறதா?) சரி. நீங்கள் உண்மையிலேயே அதை விசுவாசிக்கிறீர்கள், உங்கள் மடியில் ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது, நீங்கள் அதைத் தொடர்ந்து வாசித்தால், சரி, எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கும். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள், ஆனால் இயேசுவுக்கு முன்பாக அல்ல. புரிகிறதா? அவர் நம் இருவரையும் அறிவார். நான் ஏதோ அசைவதைப் பார்த்தேன். யாரோ ஒருவர் அசைந்துகொண்டிருந்தார். அது என்று நினைத்தேன்... நான் ஒரு வெளிச்சத்தைப் பின்பற்ற வேண்டும் (புரிகிறதா?), அது பரிசுத்த ஆவியானவர். தேவன் ஒரு வெளிச்சமாக இருக்கிறார். தேவனில் வாசமாயிருக்கிறவர்கள் வெளிச்சத்தில் வாசமாயிருக்கிறார்கள். அது சரியா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 71 இந்த ஸ்திரீ இங்கே நிற்கிறாள், சபையாரால் என் குரலைக் கேட்க முடிந்தால், இந்த நேரத்தில் அவர்களால் முடியும் என்று நம்புகிறேன். அவள்-அவள் மிகவும் வியாதியாயிருக்கிறாள். அவள் ஒரு உண்மையான நரம்பு வியாதியால் அவதிப்படுகிறாள். மேலும் அவளுக்கு-அவளுக்கு இரண்டு முறை நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அது சரிதான். மேலும் உங்களுக்கு ஒருவிதமான-உங்கள் நுரையீரலில்... அது நிமோனியா, மற்றும் ஒரு வைரஸ். ஆம், அவர்களுக்கு இருந்தது. மேலும் நான்... உங்களுக்கும் ஓரிரு பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இது உண்மை. உங்களைக் குணமாக்க அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், சகோதரியே. நீங்கள் இருக்கிற நிலையில், இப்போது ஏதோவொன்று என்னுடன் இங்கே இருக்கிறது, நான் வெறும் ஒரு மனுஷன் என்று உங்களுக்குத் தெரியும், எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் உங்களை அறிந்த ஏதோவொன்று இங்கே இருக்கிறது. அது எப்படியோ இந்தச் சரீரத்தின் மூலம் கிரியை செய்கிறது. அவர் சொன்னார், "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைத்தால் அவர்கள் சொஸ்தமாவார்கள்." நீங்கள் அதைச் செய்ய வேண்டும், இல்லையா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவிசுவாசம் என்பது ஒன்றே ஒன்றுதான். தேவனுடைய வார்த்தை கூட உங்களுக்கு முதலில் சொல்கிறது. புரிகிறதா? நீங்கள்... பின்பு உங்கள் விசுவாசத்தை ஊக்குவிக்க அவர் அன்போடு வேறொன்றை அனுப்புகிறார். அவர் அற்புதமானவர் அல்லவா? இப்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று குணமடையுங்கள். ஆமென். 72 தேவனுக்கு ஸ்தோத்திரம். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அம்மையாரே? நீங்கள் மிகவும் வியாதியாயிருக்கிறீர்கள். தொண்டை வியாதி. அது சரிதான். தொண்டையிலும் அது புற்றுநோய். அது சரிதான். நிச்சயமாக உங்களுக்கு அது தெரிந்திருந்தது. இயேசு உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா, அம்மையாரே? உங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவர் மூலமாகத்தான். நீங்கள் விசுவாசித்தால், தேவன் உங்களைக் குணமாக்குவார். நீங்கள் அதைச் செய்கிறீர்களா? இங்கே வாருங்கள். அன்பான பரம பிதாவே, சுமார் ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதைச் சுமந்தவரின் இரத்தக் காலடிகளை இழுத்துக்கொண்டு, ஒரு பழைய கரடுமுரடான சிலுவை கல்வாரிக்குச் சென்றது. மேலே சென்ற அந்தப் பாதையில், அவருடைய பரிதாபமான சிறிய பலவீனமான சரீரம் விழுந்தது; அவர் இரத்தச் சிந்தி, இரத்தத்தில் நடந்து கொண்டிருந்தார். அதுதான் வழி, கதவுகளைத் திறக்கிறது. அவருடைய சிறிய பலவீனமான பௌதிக சரீரம் அந்தப் பாரத்தினால் கீழே விழுந்தது, அங்கே சிரேனே ஊரானாகிய சீமோன் என்ற ஒரு கறுப்பின மனிதன் நின்றான், சிலுவையை எடுத்து தன் தோள்களில் வைத்து, அதைச் சுமந்து செல்ல அவருக்கு உதவினான். எவ்வளவு இருண்ட நேரம், இருண்ட கல்வாரி. 73 இதோ அவருடைய பிள்ளைகளில் ஒருவர் இன்றிரவு, இங்கே நிற்கிறார், மரண இருளின் பள்ளத்தாக்கில் நிற்கிறார். ஓ தேவனே, இரக்கமாயிரும். இந்த ஸ்திரீயைக் கொல்லும் பிசாசே, கல்வாரியின் வெளிச்சத்தில், என் கைகள் அவள்மீது இருக்கையில் நீ அவளை விட்டுப் போகவேண்டும் என்று, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், என் ஆண்டவரின் கட்டளைகள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டுப் புறப்பட்டுப் போ. ஆமென். "நீ விசுவாசிக்கக்கூடுமானால், விசுவாசிக் கிறவனுக்கு எல்லாம் கூடும்." நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசமாயிருங்கள். தன் தோள்களின் மேல் ஒரு சிறிய கோட்டைப் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டு இங்கே அமர்ந்திருக்கும் சிறிய அம்மையார், அவள் ஒரு நுரையீரல் வியாதியால் அவதிப்படுகிறாள். அங்கே வரிசையின் கடைசி முனையில் தன் கையை உயர்த்தியபடி அமர்ந்திருக்கிறார், அவளுடைய தோள்களில் ஒரு கோட் இருக்கிறது. அம்மையாரே, அப்போது நான் கறுப்பின அம்மையாருக்காக ஜெபித்துக் கொண்டிருந்த போது, அந்த நேரத்தில் நீங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தீர்கள். அது சரிதானே? மேலும் நீங்கள் நுரையீரல் வியாதியால் அவதிப்படுகிறீர்கள். இயேசு அந்த ஸ்திரீயைக் குணமாக்கும் முன்பே உங்களைக் குணமாக்கினார். நீங்கள் இப்போது நலமாக இருக்கிறீர்கள்; உங்கள் விசுவாசம் உங்களைக் குணமாக்குகிறது. ஆமென். விசுவாசமாயிருங்கள். புரிகிறதா? நீங்கள் எங்கே இருந்தாலும் பரவாயில்லை. இதை விசுவாசிக்கிறாயா? இது அவளுடைய விசுவாசம். நீங்கள் சொல்கிறீர்கள், "அது வேதாகமத்தில் இருக்கிறதா?" நிச்சயமாக. அந்த ஸ்திரீயை நோக்கி, "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். உன்னால் விசுவாசிக்கக்கூடுமானால்... 74 அங்கே அந்த ஸ்திரீயைச் சுற்றிலும் பார்க்கையில், அந்தப் பித்தப்பை வியாதியிலிருந்து தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா, அவர் உங்களை நலமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் செய்வார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் அதைச் செய்துவிட்டார். நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படி நீங்கள் விசுவாசிப்பதைத்தான் நான் காண விரும்புகிறேன். அந்த அமைதியான, சாந்தமான விசுவாசத்தோடு நீங்கள் வருவதைத்தான் நான் காண விரும்புகிறேன். உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால். எப்படி இருக்கிறீர்கள், அம்மையாரே? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சரி, நான் உங்களுக்கு அறிமுகமில்லாதவன், அம்மையாரே. என் வாழ்நாளில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை, ஆனால் நீங்கள் பிறப்பதற்கு முன்பே இயேசு உங்களை அறிந்திருக்கிறார். உலகத்தோற்றத்திற்கு முன்னே அவர் உங்கள் ஆவியை உருவாக்கியபோது, நீங்கள் அங்கே-ஆவி ரூபத்தில் சிருஷ்டிக்கப்பட்டபோதே அவர் உங்களை அறிந்திருந்தார். ஏதோ ஒரு நாள் நீங்கள் களத்தில் தோன்றி இந்த மேடையில் இங்கே நிற்பீர்கள் என்பதை அறிந்து, அது என் ஆண்டவர், அதைப் பற்றி எல்லாமே அவருக்குத் தெரியும். 75 இப்போது, அவர் உங்களோடு இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர் அல்ல, நீங்கள் உங்களுக்காகவும் இங்கே இல்லை. ஒரு பிரசங்கியாருக்காக நீங்கள் இங்கே நிற்கிறீர்கள். மேலும் அந்தப் பிரசங்கியார் ஒரு ஸ்திரீ. மேலும் அவளுக்கு இருதய வியாதி இருக்கிறது, அவள் ஒரு பெந்தெகொஸ்தே பிரசங்கியார். அவள் தன் கைகளை முன்னும் பின்னுமாக உயர்த்துவதை நான் பார்க்கிறேன், அவள் கடினமாகப் பிரசங்கிக்கிறாள். மேலும் வேறொன்றும் இருக்கிறது, அவள் கடந்த சில நாட்களாக இரத்தம் துப்புகிறாள். சொல்லுங்கள், அது ஒரு... அது இங்கே இல்லை; அது கென்டக்கியில், கோவிங்டனுக்கு அருகில் உள்ளது. அங்கே ஆற்றங்கரையின் வழியே அவள் இறங்கிப் போவதை நான் பார்க்கிறேன். அது சரிதான். இப்போது, அந்தப் கைக்குட்டையை எடுத்து இயேசுவின் நாமத்தில் அவளுடைய சுகத்திற்காக இப்போது அவள் மேல் வையுங்கள். நம் இருதயங்களை இயேசு கிறிஸ்துவுடன் பிணைக்கும் அந்தப் பந்தம் ஆசீர்வதிக்கப் படுவதாக. உன்னால் விசுவாசிக்கக்கூடுமானால், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். ஓ, அவர் மிகவும் இனிமையானவர், மிகவும் அன்பானவர், நான் என் முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறேன். நீங்களும் நேசிக்கிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 76 பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதி, அங்கே முனையில் அமர்ந்திருக்கிறீர்கள், அம்மையாரே. இயேசு உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம்; சந்தேகப்பட மட்டும் வேண்டாம். ஆமென். நீங்கள் மிகவும் வியாதியாயிருக்கிறீர்கள், அம்மையாரே. வயிற்றில் ஒரு கட்டி, ஆனால் இயேசு உங்களைக் குணமாக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். பரம பிதாவே, இந்த ஸ்திரீ இப்போது மரண இருளின் பள்ளத்தாக்கில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, இவளுக்கு இரக்கமாயிரும். ஆனால் உம்மால் இவளைக் குணமாக்க முடியும். அதை அருளுவீராக, அன்பான தேவனே. இயேசுவின் நாமத்தில் நான் இவளை ஆசீர்வதிக்கும்போது, உம்முடைய நித்திய அன்பும் ஆசீர்வாதங்களும் இந்த ஸ்திரீயின் மேல் தங்கியிருப்பதாக. மேலும் உமது மகிமைக்காக இவள் இன்னும் அநேக, அநேக மகிழ்ச்சியான வருடங்கள் வாழ்வாளாக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, விசுவாசமா யிருந்து நம்புங்கள். 77 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இரத்தசோகை உள்ளவர் போல் தெரியவில்லை, ஆனால் உங்களுக்கு அது இருக்கிறது. இயேசு கிறிஸ்து குணமாக்குவார் என்றும் மேலும் கைக்குட்டைக்காகவும் நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? ஓ அன்பான இயேசுவே, பரிசுத்த ஆவியானவர் இந்த ஸ்திரீயினிடம் வந்து இவளைக் குணமாக்கி இவளை நலமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. ஒரு சிறிய பேரக்குழந்தை, அம்மையாரே, நீங்கள் அங்கே அதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள், அதனால் நன்றாகப் பேச முடியாது, கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இயேசு இந்தக் குழந்தையைக் குணமாக்கப் போகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்களா? நல்லது, இப்போது பயப்பட வேண்டாம்; விசுவாசமாயிருங்கள். சில நிமிடங்களுக்கு முன்பு அந்தச் சிறுவன் இங்கே நிற்பதை நான் பார்த்தேன். எனவே விசுவாசமாய் இருங்கள். அவன் நலமாகப் போகிறான் என்று நான் நம்புகிறேன். ஆமென். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நமது முழு இருதயத்தோடும். 78 அம்மையாரே, உங்கள் தலைமுடியை இப்படிச் சீவிக்கொண்டு, ஒரு இளஞ்சிவப்பு நிறக் கோட் அணிந்துகொண்டு, மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு, மூட்டுவலியுடன், அங்கே அமர்ந்திருக்கிற நீங்கள், இயேசு உங்களையும் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அங்கே அந்த ஸ்திரீயிலிருந்து வரிசையின் நேரே வெளியே அமர்ந்திருக்கிற நீங்கள், இயேசு உங்களைக் குணமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்பதையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆமென். ஓ, நீங்கள் அவர் உண்மையானவர் என்று விசுவாசிக்க முடிந்தால் அவர் உண்மையானவர். அது சரிதான். ஆனால் நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் இந்த ஸ்திரீக்கு சைனஸ் வியாதி இருக்கிறது. அம்மையாரே, இயேசு சைனஸ் வியாதியிலிருந்து உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்குப் பக்கத்தில் வீங்கிய நரம்புகளுடன் அமர்ந்திருக்கும் அம்மையாரே, சரியாக இங்கே பின்னால் அமர்ந்திருக்கிறீர்கள், உங்களால் பார்க்க முடிகிறதா? நிச்சயமாக, அது சரிதான்; இதோ உங்கள் கை. ஆமென். ஓ, தேவனுடைய சர்வவாதிகாரம், ஒரு நபரை அடைய முயற்சிக்கும்போது, நான்கு பேரை அழைக்கிறது. அது அல்லவா-அவர் அற்புதமானவர் அல்லவா? 79 எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள், ஐயா, அப்படித்தானே? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். உங்களுக்குத் தெரியாது... கேட்பதில் சிரமம், நல்லது. இங்கே வாருங்கள். ஒரு நிமிடம் உங்கள் தலையை வணங்குங்கள். ஓ இயேசுவே, தேவனுடைய குமாரனே, நாங்கள் விசுவாசிப்பதற்கு அற்புதங்களைப் பார்க்க வேண்டியதில்லை, ஆண்டவரே, நாங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் எங்கள் இருதயங்கள் உமது பார்வைக்குச் சுத்தமாக இருக்கிறது என்பதை அறிவதுதான். ஆனால் இந்த மனுஷனின் காதைத் திறப்பீரா, அதனால் நான் பேசுவதை அவர் கேட்க முடியும் அல்லவா? இதை அருளுவீராக, பிதாவே. நீர் இதைச் செய்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இப்போது, பிதாவே, அவர் ஒரு மனுஷன் என்பதை அறிந்து, அவருக்கென்று அவர் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், ஆனால் விசுவாசத்தில் நான் இந்தப் பிசாசுக்குச் சவால் விடுகிறேன். நீ செவிடான ஆவியே, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், அந்த மனுஷனை விட்டு வெளியே வா, இயேசுவின் நாமத்தில் அவனை விட்டுப் போ. 80 இப்போது நான் சொல்வது உங்களுக்குக் கேட்கிறது, இல்லையா? உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறீர்களா? இப்போது, நீங்கள் உங்கள் கேட்கும் திறனைப் பெற்றுவிட்டீர்கள். புரிகிறதா? அவர் அற்புதமானவர் அல்லவா? அவர் நிச்சயமாகவே அப்படித்தான். மற்றொரு காரியம், நீங்கள் பெ-உங்களுக்கும் ஒரு கட்டி இருப்பதைக் காண்கிறேன், ஆனால் இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்க முடியும், அல்லவா? அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? புரிகிறதா, நல்லது. உங்கள் முதல் பெயர் ஜெர்ரி, இல்லையா? மான், உங்கள் கடைசிப் பெயர், நீங்கள் இண்டியானாவில் உள்ள கேரியில் வசிக்கிறீர்கள். இது சரிதானே, இல்லையா? உங்கள் எண் 2689 அல்லது 87, 89 அதுபோல ஏதோ ஒன்று. அது சரிதான், இல்லையா? ஊகூம். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? புல்டன் தெருவில்... இப்போது, நீங்கள் சந்தோஷத்துடனே நேராக வீட்டிற்குச் சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நலமாக இருங்கள். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. [சபையார், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்கிறார்கள்] அம்மையாரே, நீங்கள் போய் உங்கள் இரவு உணவைச் சாப்பிட விரும்புகிறீர்களா? ஓ, அந்தப் பழைய அல்சர் உங்களை விட்டு நீங்கிவிட்டது. அப்படியே புறப்பட்டு, "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லுங்கள். 81 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, ஐயா? உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் இப்போது விசுவாசித்தால், அந்தப் பழைய ஆஸ்துமா வியாதி உங்களை விட்டு நீங்கி, இருமல் நின்று நீங்கள் நலமாவீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் சென்று இருமுவதை நிறுத்துங்கள், இயேசுவின் நாமத்தில். ஆமென். வாருங்கள், அம்மையாரே, இந்த முதிய அம்மையார் ஒரு பிரச்சனை, பெண்கள் வியாதி அது... சரி உங்களுக்கு, அது நீண்ட காலமாக, மெனோபாஸ் காலத்திலிருந்தே உங்களைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. ஆனால்... அது உண்மைதானே, இல்லையா? நல்லது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இப்போது வீட்டிற்குச் சென்று அதிலிருந்து மீண்டுவாருங்கள். 82 "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. [சபையார், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்கிறார்கள்] அந்தப் பாதையின் முடிவில் அங்கே நடந்து சென்று, "மூட்டுவலி என்னை விட்டு நீங்கிற்று" என்று சொல்லுங்கள். ஆமென். மேலும் குணமடையுங்கள். "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. [சபையார், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்கிறார்கள்] போய் உங்கள் இரவு உணவைச் சாப்பிடுங்கள்; வயிற்றுப் பிரச்சனை உங்களை விட்டுப் போய்விட்டது. "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? "விசுவாசிக்கி றவர்களுக்கு எல்லாம் கூடும்." நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். எத்தனை பேர் குணமடைய விரும்புகிறீர்கள், உங்கள் கையைப் பார்ப்போம். "உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால்." நான் இப்போதே விசுவாசிக்கிறேன். 83 அந்த ஸ்திரீயை இங்கே மேலே கொண்டுவர வேண்டாம்; அவள் என் பக்கத்தில் நிற்கிறாள். சரி, பாருங்கள், இப்போது நாம்... ஆம், ஐயா, அந்த நரம்பு வியாதியுடன் என்னைப் பார்த்தபடி மேல்மாடத்தில் அமர்ந்திருக்கும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. உங்கள் கையை உயர்த்திப் பிடியுங்கள். தேவன் ஆசீர்வதிப்பாராக... ஆம், வெகு தொலைவில் பின்பக்கமாக அமர்ந்திருக்கும் கறுப்பின மனிதரே. அது சரிதான், ஐயா, நீங்கள் அப்போதே குணமாக்கப்பட்டீர்கள், இயேசு கிறிஸ்து உங்களை நலமாக்கினார். அல்லேலூயா. நோக்கிப் பார்த்து விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவோடே ஐக்கியமாயிருக்கும்படி உங்கள் விசுவாசத்திற்கு நான் சவால் விடுகிறேன். இப்போது ஒருவர் மீது ஒருவர் உங்கள் கைகளை வையுங்கள், நாம் எல்லாவற்றையும் தீர்த்துவிடுவோம். என் விசுவாசம் உம்மை நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; இப்போது, நான் ஜெபிக்கும்போது எனக்குச் செவிகொடுப்பீராக, என் பாவங்களையெல்லாம் அகற்றுவீராக, நான் ஒருபோதும் வழிதவறிப் போக, உம்மை விட்டு விலக விடாதிரும். இயேசுவே, இயேசுவே, என் ஆண்டவரே, என் ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் குணமாக்குவீராக, ஆண்டவரே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமது ஆவியானவர் இப்போதே இந்தச் சபையார் மீது அசைவாடி, இங்குள்ள ஒவ்வொரு நபரையும் குணமாக்குவாராக. சாத்தானே, உன்னால் இந்தக் கூட்டத்தைக் கட்டிவைக்க முடியாது; இங்கிருந்து வெளியே வா. நீ கடிந்துகொள்ளப்படுகிறாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தச் சபையாரை விட்டுப் போ, பரிசுத்த ஆவியானவர் பொறுப்பெடுத்துக்கொண்டு, தேவனுடைய மகிமைக்காக இங்குள்ள ஒவ்வொரு நபரையும் குணமாக்குவாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஐக்கியம் கொள்வதற்கான வழி (55-1009) 2